”ஒரே ஒரு No Ball, அனைத்தையும் பாழாக்கிவிட்டது” - சந்தீப் சர்மா பந்துவீச்சு குறித்து சஞ்சு சாம்சன்!

போட்டியின் கடைசிப் பந்தில் அப்துல் சமத் சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
Sanju Samson
Sanju SamsonPT Desk

“சந்தீப் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்தேன், ஆனால் அந்த ஒரே ஒரு No Ball, அனைத்தையும் பாழாக்கிவிட்டது” என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Jos Buttler | Sanju Samson during
Jos Buttler | Sanju Samson duringPT DESK

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 215 ரன்களை எடுத்தது. கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடியது. இந்நிலையில், போட்டியின் கடைசிப் பந்தில் அப்துல் சமத் சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

போட்டிக்கு பின்பு தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் “இது போன்ற போட்டிகள் தான் ஐபிஎல் தொடரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகிறது. நீங்கள் வென்றுவிட்டதாக அறிவிக்கப்படும்வரை, போட்டியின் கடைசிப் பந்து வரை நாம் வெற்றிப் பெற்று விட்டோம் என்று நினைக்க முடியாது.

sandeep sharma
sandeep sharmaPT Desk

உண்மையில் சந்தீப் சர்மா மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஏனென்றால் அவர் ஏற்கெனவே இறுதி ஓவரில் சிறப்பாக பந்துவீசி வெற்றியைப் பெற்று தந்திருக்கிறார். சிஎஸ்கே எதிரான ஆட்டத்தில் அவர்தான் வெற்றியை தேடி கொடுத்தார். ஆனால் கடைசி No Ball எங்களுடைய வெற்றியை பறித்தது. நிச்சயமாக ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை பாராட்ட வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக இந்த ஆட்டத்தை கையாண்டார்கள்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com