“ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விளையாடுவது சாதாரணம்தான்”! - சர்ச்சைகளுக்கு ரோகித் முற்றுப்புள்ளி!

மும்பை அணியில் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டது சர்ச்சையாக மாறிய நிலையில், ஹர்திக் கீழ் விளையாடுவது சாதரண விசயம் தான் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மாx

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டானாக 5 கோப்பைகளை வென்ற போதும், நடப்பு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்தது மும்பை அணி நிர்வாகம். இந்த விசயம் பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்ல முடிவுசெய்ததாக செய்தி வெளியானது. ஆனால் மும்பை அணியில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

rohit sharma
rohit sharmami

இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு நடப்பு ஐபிஎல் சிறப்பாக செல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் கேள்விக்குறியாக இருப்பதாகவும், அதனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி வைரலானது. அதேநேரத்தில் ஹர்திக் இடம்பெற்றாலும் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையேயான விரிசல் பெரிதாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

hardik pandya
hardik pandyax

ஆனால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றது மட்டுமில்லாமல், துணை கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
‘3 ஐபிஎல் அணியிலிருந்து 12 வீரர்கள் தேர்வு..’ ஓரங்கட்டப்பட்ட 2 அணி! WC சென்ற IPL அணி வீரர்கள் யார்?

ஹர்திக் தலைமையில் விளையாடுவது சாதரணம் தான்..

டி20 உலகக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்புக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவது குறித்து விளக்கமளித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் நிறைய கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன், இதில் புதியதாக ஒன்றும் இல்லை. என்னைப்பொறுத்தவரை செய்ய வேண்டியதை சிறப்பாக செய்யவேண்டும், அதை நான் கடந்த ஒரு மாதமாக சரியாக செய்து வருகிறேன் என நம்புகிறேன்" என்று சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

ரோகித் சர்மா
ரோகித் சர்மாட்விட்டர்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (து.கே), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

மாற்று வீரர்கள்

ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான்

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு உழைக்கணுமா? காலங்காலமா வஞ்சிக்கப்படுகிறோம்! பத்ரிநாத் ஆதங்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com