யாருக்கு அதிக விக்கெட்? அதிக ரன்? ஒரு இந்திய வீரர், ஒரு ஆஸி.வீரரை தேர்ந்தெடுத்த ரிக்கி பாண்டிங்!

2024 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் 2-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.
ind vs aus
ind vs ausweb

2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி கோலாகலமாக தொடங்கப்படவிருக்கும் நிலையில், கோப்பையை வெல்வதற்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஐந்து-ஐந்து அணிகளாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவிருக்கின்றன.

குரூப் A-ல்,

இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் B-ல்,

நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.

INDIA TEAM
INDIA TEAM web

குரூப் C-ல்,

சொந்த மண்ணில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் ஜெனிவா முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் D-ல்,

தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாள் முதலிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

ind vs aus
’Toss போடுவதில் ஏமாற்றிய MI?’ முதல் ‘கைக்கொடுக்காமல் சென்ற தோனி’ வரை! 2024 IPL-ன் டாப் 5 சர்ச்சைகள்!

யாருக்கு அதிக விக்கெட்டுகள்?

உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும்? எந்த வீரர் அதிக விக்கெட்டுகள் மற்றும் அதிக ரன்கள் அடிக்கப்போகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பும்ரா
பும்ராManvender Vashist Lav

அந்தவகையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரிக்கி பாண்டிங், “2024 டி20 உலகக்கோப்பை தொடரில் யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகிறார் என்று கேட்டால், என்னுடைய பதில் ஜஸ்பிரித் பும்ராதான். அவர் ஒரு சிறந்த செயல்திறனுடன் பல ஆண்டுகளாக அபாரமான பங்களிப்பை கொடுத்துவருகிறார். தற்போது ஒரு சிறந்த ஐபிஎல் தொடரை பெற்றிருந்தார். அவரால் புதிய பந்தில் ஸ்விங் செய்யமுடிகிறது, சிறந்த சீம் பொசிஸனை பெற்றுள்ளார். ஐபிஎல் முடிவில் அவரது எகானமி ரேட் ஒரு ஓவருக்கு வெறும் ஏழு ரன்களுக்கும் குறைவாகவே இருந்தது” என்று ஐசிசி மதிப்பாய்வில் பாண்டிங் கூறியுள்ளார்.

ஜஸ்ப்ரித் பும்ரா
ஜஸ்ப்ரித் பும்ராManvender Vashist Lav

தொடர்ந்து பேசிய அவர், "பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஓவர்களை வீசுவதால் பும்ரா தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்கிறார். டி20 கிரிக்கெட்டில் கடினமான ஓவர்களை வீசும்போது, ​​அது உங்களுக்கு நிறைய விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பளிக்கிறது. அதனால், பும்ராவிற்குதான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பிருக்கிறது. நான் அவருக்கே வாய்ப்பென சொல்வேன்" என்று மேலும் கூறினார்.

ind vs aus
”உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்பு” - அத்துமீறிய ரசிகருக்கு இப்படியொரு சோகமா? தோனி கொடுத்த நம்பிக்கை!

யாருக்கு அதிக ரன்கள்?

டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை அடிக்கப்போகும் வீரர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டின் பெயரை தேர்ந்தெடுத்தார். தன்னுடைய பிரைம் ஃபார்மில் அதிரடியாக விளையாடிவரும் டிராவிஸ் ஹெட், அதிக ரன்களை குவிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Travis Head
Travis Head

டிராவிஸ் ஹெட் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரராக டிராவிஸ் ஹெட் இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிவப்பு-பந்து அல்லது வெள்ளை-பந்து கிரிக்கெட் என எதுவாக இருந்தாலும், உயர்தர கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார். தற்போதைய கிரிக்கெட்டில் அவருடைய அதிரடியான அணுகுமுறை, அவரை அதிக ரன்கள் குவிக்க உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ind vs aus
”MI-ம் ரோகித்தும் பிரிவார்கள்.. உடன் அவரும் வெளியேறுவார்”! 2025 ஐபிஎல் Retained பற்றி ஆகாஷ் சோப்ரா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com