கர்நாடாகா முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆர்சிபி ரசிகர்
கர்நாடாகா முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆர்சிபி ரசிகர்x

’ஆர்சிபி கோப்பை வென்றால் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும்’ கர்நாடகா முதல்வருக்கு RCB ரசிகர் கடிதம்!

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கோப்பை வென்றால் அதை கொண்டாடும் வகையில் மாநில பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வருக்கு ஆர்சிபி ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியிருப்பது வைரலாகி வருகிறது.
Published on

17 வருடங்களாக ஐபிஎல் கோப்பை வெல்லாமல் இருந்துவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 9 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு சீசனில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஏற்கனவே 3 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியை மட்டுமே சந்தித்திருக்கும் ஆர்சிபி அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் கோப்பை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.

ஆர்சிபி 2025
ஆர்சிபி 2025web

இந்நிலையில் ஆர்சிபி கோப்பை வென்றால் அதனை மாநில பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு ஆர்சிபி ரசிகர் ஒருவர் கைப்பட கடிதம் எழுதியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்சிபி கோப்பை வென்றால் பொதுவிடுமுறை..

பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்த் மல்லன்னவர் என்ற ரசிகர், ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்றால் அந்த நாளை “ஆர்சிபி ரசிகர்களின் திருவிழா” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு கர்நாடகா முதலமைச்சரிடம் வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்கடிதத்தில் எழுதியிருக்கும் அவர், “இந்த வருடம் ஆர்.சி.பி வென்றால், அந்த நாளை ‘RCB ரசிகர்களின் திருவிழா’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்; மாவட்டங்கள் தோறும் அந்த நாளில் ஒவ்வொரு வருடமும் கொண்டாட்டங்கள் நடக்க ஏதுவான சூழலையும் அரசு உருவாக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com