WPL| ஒரே போட்டியில் 438 ரன்கள்.. ஒரு ஓவரில் 28 ரன்கள்.. அனல் பறந்த ஆட்டம்! வெளியேறியது RCB!
மகளிர் ஐபிஎல் என கூறப்படும் 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது ஏப்ரல் 14-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவந்த WPL தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்வதற்கான ரேஸில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் 5 அணிகள் போராடிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் இரண்டு அணிகளும் 5 தோல்விகளுக்கு பிறகு தொடரை விட்டே வெளியேறியுள்ளன.
438 ரன்கள் குவிக்கப்பட்ட போட்டி..
4 தொடர் தோல்விகளை சந்தித்த ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் உபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் களம்கண்டது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உபி வாரியர்ஸ் அணி, ஜார்ஜியா வொல்லின் அதிரடியான 99* ரன்கள் ஆட்டத்தால் 225 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. WPL வரலாற்றில் டெல்லி அணியால் அடிக்கப்பட்ட 223 ரன்கள் சாதனையை உடைத்தது உபி வாரியர்ஸ் அணி.
226 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், 33 பந்தில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 69 ரன்கள் குவித்த ரிச்சா கோஸ் ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார். இறுதியாக வந்து 6 பந்தில் 26 ரன்கள் பறக்கவிட்டு மிரட்டிய ஸ்னே ரானா உபி வாரியர்ஸ் அணியை கதிகலங்க வைத்தார். கேப்டன் தீப்தி ஷர்மா ஒரே ஓவரில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து WPL வரலாற்றில் மோசமான சாதனை படைத்தார்.
கடைசி 6 பந்துக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணியால் இறுதி ஓவரில் இலக்கை எட்ட முடியவில்லை. உபி வாரியர்ஸ் மற்றும் ஆர்சிபி இரண்டு அணிகளும் 5 தோல்விகளுக்கு பிறகு தொடரை விட்டே வெளியேறியுள்ளன.