‘அவர் மனவலியை மறச்சு பேசுறார்..’- டாக்டரின் ட்வீட்டை லைக் செய்த ஜடேஜா! ஓபனாக வேதனையை கொட்டிவிட்டாரா?

சொந்த அணி ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்காமல், விக்கெட் விழுவதற்காக காத்திருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது
Dhoni-Jadeja
Dhoni-JadejaPTI

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

16-வது சீசனின் 55-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான சென்னை அணி, வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி, 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட நெருங்கியுள்ளது. இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்திருந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், போட்டிக்குப் பின் பேசிய ரவீந்திர ஜடேஜா, தோனிக்கு முன்னதாக பேட்டிங் ஆர்டரில் களமிறங்கும்போது, தனது விக்கெட்டுக்காக (அவுட்) ரசிகர்கள் காத்திருப்பதாக நகைச்சுவையுடன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஒரு சுழற்பந்து வீச்சாளராக, மைதானத்தில் பந்து திரும்பும்போதும், ஹோல்ட் ஆகும் போதும் மகிழ்ச்சியாக உணருகிறேன். நாங்கள் சேப்பாக்கம் மைதானத்தில்தான் பயிற்சி செய்கிறோம், அதனால் எது சரியான வேகம் மற்றும் லென்த் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், பிற அணிகள் இங்கே வந்து ஆடும்போது, மைதானத்திற்கு ஏற்றவாறு தங்களை பழக்கப்படுத்திக்கொண்டு உள் வாங்கிக்கொள்ள நேரம் தேவைப்படும். அதனால், ஹோம் க்ரவுண்டின் சூழலை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். எல்லா வீரர்களும் அவரவர் பணிகளை சிறப்பாக செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடி வருகிறோம்.

சென்னை அணி சார்பில் நான் 7-வது வீரராக பேட்டிங்கில் களமிறங்கும்போது, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து ‘மஹி பாய்.. மஹி பாய்..(தோனி)’ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விடுவதை நான் கேட்கிறேன். ஒருவேளை தோனிக்கு முன்னதாக நான் களமிறங்கினால், எனது விக்கெட்டுக்காக (அவுட்) காத்திருப்பார்கள். எனினும், அணி வெற்றிபெற்றால் போதும், நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Jadeja
Jadeja

இதனை நகைச்சுவையாக அவர் தெரிவித்தாலும், நெட்டிசன் ஒருவர், வேதனையை மனதில் மறைத்து வைத்துக்கொண்டு ஜடேஜா புன்னகையுடன் அவ்வாறு கூறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சொந்த அணி ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்காமல், விக்கெட் விழுவதற்காக காத்திருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது என்றும், சென்னை அணியின் இளவரசர் நீங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டை ஜடேஜாவும் லைக் செய்துள்ளார்.

jadeja
jadeja@imjadeja

ஐபிஎல் தொடரில் கடந்த 2012-ம் ஆண்டு முதல், சென்னை அணிக்காக ஜட்டு என்கிற ஜடேஜா விளையாடி வருகிறார். 2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் சென்னை அணி ஐபிஎல் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்களில் ஜடேஜாவும் ஒருவர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தையே ஜடேஜா வெளிப்படுத்தி வந்ததால், கடந்த 2022-ம் ஆண்டு அவர், சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனியை (12 கோடி ரூபாய்) விட அதிக சம்பளத்திற்கும் (16 கோடி ரூபாய்) அவர் தக்கவைப்பட்டிருந்தார்.

Dhoni-Jadeja
கேப்டன் பொறுப்பு சர்ச்சை முதல் ’எல்லாம் சுகம்’ ட்வீட் வரை; யூகங்களை தவிடுபொடியாக்கிய ஜடேஜா

எனினும், லீக் போட்டிகளில் சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததால் எழுந்த விமர்சனங்களை அடுத்து, கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே தந்துவிட்டு ஆல் ரவுண்டராக மட்டுமே களமிறங்கிய ஜடேஜா, பின்னர் காயம் காரணமாக கடந்த சீசனிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, சென்னை அணி நிர்வாகத்திற்கும், ஜடேஜாவுக்கும் பனிப்போர் நடந்து வந்ததாகவும், சமூகவலைத்தளத்தில் சென்னை அணி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை நீக்கியதாகவும் செய்திகள் பரவிய நிலையில், இந்த சீசனில் மீண்டும் அவர் சென்னை அணிக்காக களமிறங்கி விளையாடி வருகிறார்.

ஜட்டு களமிறங்கினாலே சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்த காலம் போய், தற்போது தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இது என்று கூறப்பட்டு வருவதால், தோனிக்கு முன்னதாக ஜடேஜா உள்பட மற்ற வீரர்கள் களமிறங்கும்போது, ரசிகர்கள் ‘தோனி... தோனி..’ என்ற ஆரவாரம் செய்து வருகின்றனர். மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தாண்டி, சிஎஸ்கே விளையாட செல்லும் மைதானங்களில், சொந்த அணியை காட்டிலும், மஞ்சள் படையையே அதிகளவில் காணமுடிகிறது. குறிப்பாக கொல்கத்தாவில், அந்த அணிக்கான ஆதரவைக் காட்டிலும் சென்னை அணிக்கான ஆதரவையே காண முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com