ரோஜர் பின்னி, ராஜீவ் சுக்லாஎக்ஸ் தளம்
T20
ஓய்வுபெறும் ரோஜர் பின்னி.. பிசிசிஐ இடைக்கால தலைவராகும் ராஜீவ் சுக்லா!
பிசிசிஐயின் புதிய தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிசிசிஐயின் புதிய தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி, 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப் பொறுப்பேற்றார்.
ராஜிவ் சுக்லாஎக்ஸ் தளம்
தற்போது அவருடைய பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளாக பிசிசிஐயின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா ஜூலை மாதத்தில் இருந்து இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த பிசிசிஐ தலைவருக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதுவரை ராஜீவ் சுக்லா இந்த பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது.