riyan parag
riyan paragweb

என்னா அடி! 10 சிக்சர்கள், 16 பவுண்டரிகள்.. 64 பந்தில் 144 ரன்கள் குவித்த ரியான் பராக்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வளர்ந்துவரும் வீரரான ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
Published on

18-வது ஐபிஎல் சீசனானது மார்ச் 22 முதல் தொடங்கி மே 25-ம் தேதிவரை நடத்தப்படவிருக்கிறது.

கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் அடுத்த கோப்பைக்காகவும், கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முதல் கோப்பைக்காகவும் களமிறங்க உள்ளன.

2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

144 ரன்கள் விளாசிய ரியான் பராக்..

அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கு தயாராகிவரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்களுடைய பயிற்சி ஆட்டத்தில் விளையாடிவருகின்றன. அந்தப்போட்டியில் 16 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என பறக்கவிட்டு தன்னுடைய ஹிட்டிங் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்களை குவித்துள்ளார்.

இந்த வீடியோவை தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிய சக வீரர்கள் ரியான் பராக்கிற்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com