பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்cricinfo

IPL 2025| இறுதிவரை போராடிய சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர்! 11 ரன்னில் குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.
Published on

17 வருட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான செயல்திறனை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் நீடித்து வருகிறது.

17 சீசன்களில் 2014 ஐபிஎல்லில் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணி, அதை தவிர மற்றொரு ஐபிஎல் சீசனான 2008-ல் மட்டுமே அரையிறுதிவரை முன்னேறியது. அதற்கு பிறகான 15 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட பிளே ஆஃப்க்கு தகுதிபெறாமல் எதற்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் இருந்துவருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்

இப்படி மோசமான ஐபிஎல் வரலாற்றை கொண்டிருக்கும் பஞ்சாப் அணிக்கு வரப் பிரசாதம் போல வந்து சேர்ந்துள்ளனர் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும். இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் வழிநடத்தியதே இல்லை என்ற சூழலில், 2024 ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்துகிறார். அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் கோப்பைகளை வென்றுகுவித்த ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அணியிலும் ’ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் இங்கிலீஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன்’ முதலிய ஸ்டார் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இந்த சூழலில் 2025 ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கும் ஒரு அணியாக பார்க்கப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணி, முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

97 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர்..

அகமாதாபாத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 24 வயது இளம்வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி சிறந்த தொடக்கத்தை கொடுத்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்cricinfo

அவரைத்தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்து 97 ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஷஷாங் சிங் 16 பந்தில் 44 ரன்கள் அடித்து மிரட்ட 20 ஓவரில் 243 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

97 ரன்கள் அடித்திருந்தபோது சதமடிக்க வாய்ப்பு இருந்தபோதும் அணிக்கு ரன்கள் தேவை என்பதால் ஷஷாங் சிங்கை தொடர்ந்து அடிக்குமாறு கேப்டன் ஸ்ரேயாஸ் சொன்னது, ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

போராடிய சாய் சுதர்சன்..

244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியும், அடிக்கு அடி சிக்சருக்கு சிக்சர் என பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டிவிட்டனர்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

யார் விக்கெட்டை எடுத்தவரபோவது என்ற எதிர்ப்பார்ப்பில் சுப்மன் கில்லை வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தார் க்ளென் மேக்ஸ்வெல். சுப்மன் கில் 33 ரன்னில் வெளியேறினாலும், 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என விரட்டிக்கொண்டே இருந்த சாய் சுதர்சன் அணியை சேஸில் இருந்து வெளியே போகவிடாமல் பார்த்துக்கொண்டார். சாய் சுதர்சனும் 74 ரன்னில் வெளீயேற, அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு ஜோஸ் பட்லர் மற்றும் இம்பேக்ட் பிளேயர் ரூதர்ஃபோர்ட் இருவரின் தோள்களில் சேர்ந்தது.

11 ரன்னில் வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ்!

ஓவருக்கு ஓவர் 13, 12 ரன்கள் என விரட்டிக்கொண்டே இருந்த இந்த ஜோடி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைவலியாக மாறியது. என்ன செய்வதென்று விழிபிதிங்கி போன பஞ்சாப் கிங்ஸ் அணி, இம்பேக்ட் வீரராக வேகப்பந்துவீச்சாளர் வைசாக் விஜயகுமாரை களத்தில் இறக்கியது. பஞ்சாப் அணியின் இந்த மூவ் அவர்களுக்கு வெற்றிகரமான ஒன்றாக மாறியது. 2 ஓவரில் 9 ரன்களை விட்டுக்கொடுத்த வைசாக் குஜராத் அணியை இழுத்துப்பிடித்தார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

கடைசி 3 ஓவரில் 57 ரன்கள் தேவையென போட்டி மாற அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய ஜோஸ் பட்லர் நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அவரை 54 ரன்னில் போல்டாக்கி வெளீயேற்றிய யான்சன் கலக்கிப்போட்டார். அதற்குபிறகு என்னதான் ரூதர்ஃபோர்ட் மற்றும் திவேதியா போராடினாலும் குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை.

முடிவில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com