அந்தரத்தில் தொங்கும் “PlayOff” வாய்ப்பு! நீயா நானா போட்டியில் 10 அணிகள்! தலைசுற்றும் புள்ளி கணக்கு!

2023 ஐபிஎல் தொடரானது மற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களை விடவும், புள்ளிப்பட்டியலை ஒரு சுவாரசியமான நிலையில் வைத்து, அனைத்து அணிக்குமான வாய்ப்பையும் திறந்துவிட்டுள்ளது.
IPL Teams
IPL TeamsTwitter

2023 ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியில் தொடங்கி, வெற்றிகரமான ஒரு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பல த்ரில்லர்கள், புதிய சாதனைகள், சர்ச்சைக்குரிய மோதல்கள் என தொடங்கி, எந்த அணி வேண்டுமானாலும் அரையிறுதிச்சுற்றுக்கு செல்ல முடியும் என்ற சுவாரசியமான புள்ளிப்பட்டியலோடு நாள்தோறும் போட்டிகள் முடிகின்றன. இன்னும் 14 போட்டிகள்தான் லீக் சுற்று முடிவடைய உள்ளது.

தலைகீழாக மாறியுள்ள புள்ளிப்பட்டியல் ஒருபுறம் இருக்க, எந்த அணி வேண்டுமானாலும் அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என்பதால், அனைத்து அணி ரசிகர்களும், தங்கள் அணிக்கான ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

CSK
CSK@ChennaiIPL| Twitter

அந்த வகையில், சென்னைக்கு தான் இந்த முறை கோப்பை, எங்க ஆட்டமே இப்போதான் ஆரம்பிச்சிருக்கு.. மும்பைக்கு தான் 6ஆவது டைட்டில்.. தோத்திருந்தாலும் இந்தமுறை ஈசாலா கப் எங்களுக்கு தான் என்று சிஎஸ்கே, எம்ஐ, ஆர்சிபி ரசிகர்களின் ஆரவாரம் ஒருபுறம் என்றால், நாங்க இல்லாததால தான் மும்பை, சிஎஸ்கே-லாம் கப் அடிச்சது, தொடர்ந்து 2ஆவது கோப்பை எங்களுக்கு தான் என குஜராத் ரசிகர்கள் மறுபுறம், இந்தமுறை கேகேஆர்க்கு தான், லக்னோவிற்கு தான் என்று மற்ற அணி ரசிகர்களும் தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

RR
RRPT

என்ன பா எல்லா அணியும் சொல்லிட்டிங்க ஆர்ஆர் அணியை காணுமே என்று பார்த்தால், ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் எந்த அணியையும் அடிக்கும் ஒரு பலம்வாய்ந்த அணியாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ், தொடர்ந்து தோல்வியை சந்தித்து, அணிக்குள்ளேயே நம்பிக்கை இல்லாமல் இருந்துவந்தது. எல்லா ஏற்ற இறக்கங்களுக்கு பிறகும், அனைத்து அணிகளும் அடுத்தச்சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை, புள்ளிப்பட்டியலானது திறந்து வைத்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா. அப்படியொரு சம்பவத்தைத்தான் இந்த வருட ஐபிஎல் பிரத்யேகமாக செய்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ்

டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரையில், 11 போட்டிகளில் 8-ல் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன், முதலிடத்தை பிடித்து புள்ளிப்பட்டியலில் வலுவான நிலையில் இருக்கிறது. இந்த அணிக்கு கிட்டத்தட்ட 100% பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

GT
GTPTI

ஆனால் மீதமிருக்கும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தால், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு செல்வதற்கான நிலைக்கு கூட தள்ளப்படும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் தாண்டி மீதமிருக்கும் 3 போட்டியில் ஒன்றில் வெற்றிப்பெற்றாலே போதும், அந்த அணி முதல் இரண்டு இடத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ளும். இன்று நடக்கும் மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் ஜெயிக்கும் பட்சத்தில், 18 புள்ளிகளுடன் முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் அணி தகுதி பெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக போட்டிகளில் விளையாடியுள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 7-ல் வெற்றிபெற்று 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த அணிக்கு கிட்டத்தட்ட 85% அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Dhoni-Jadeja
Dhoni-JadejaPTI

மீதமிருக்கும் 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றுவிட்டால், அடுத்தச்சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை சீல் செய்துவிடும். ஆனால் அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில், நிச்சயம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும், தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு கூட தள்ளப்படலாம். அது மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து மாறும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நேற்று (11.05.2023) கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, 6 வெற்றிகள், 6 தோல்விகள் என சமநிலையுடன், 12 புள்ளிகளைப் பெற்று 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ashwin
ashwinR Senthil Kumar

அடுத்து வரும் 2 போட்டிகளில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் என பிளே ஆஃப் பந்தயத்தில் இருக்கும் எதிரணிகளோடு மோதவிருக்கிறது. அடுத்து 2 போட்டிகளிலுமே கட்டாயம் வெற்றியை பதிவுசெய்யவேண்டும். இந்த அணிக்கு கூடுதல் பலமாக, +0.633 நெட் ரன்ரேட் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை பெற்றதை அடுத்து, 3ஆவது இடத்தை சீல் செய்திருந்தது. ஆனால் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று (11.05.2023) நடந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து அந்த அணி 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 4-ம் இடத்திற்கு சரிந்துள்ளது. 11 போட்டிகளில் 6-ல் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணி, அடுத்துவரும் 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Mumbai Indians
Mumbai IndiansKunal Patil

ஒருவேளை ஒரு போட்டியிலாவது தோல்வியை சந்திக்கும் பட்சத்தில், மற்ற அணிகளுடைய வெற்றி தோல்வியை பொறுத்தும், நெட் ரன்ரேட் பொறுத்தும் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை மும்பை பெறும். இன்று நடக்கும் குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ஜெயிக்கும் பட்சத்தில், 14 புள்ளிகளுடன் 3-ம் இடத்திற்கு முன்னேறும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

பாய்ண்ட்ஸ் டேபிளில் 4ஆவது இடத்தை பிடித்திருந்த லக்னோ அணி, ஆர்.ஆர். vs கே.கே.ஆர். மோதலுக்குப் பிறகு, புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. எனினும், லக்னோ அணியானது, தனக்கு கீழிருக்கும் மற்ற அணிகளை விட கூடுதலாக ஒரு புள்ளியை பெற்று பலமாக இருக்கிறது. 11 போட்டிகளில் 5-ல் வெற்றிபெற்று 11 புள்ளிகளுடன் இருக்கும் இந்த அணி, எதிர்வரும் 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

LSG
LSGR Senthil Kumar

இந்த அணிக்கு இருக்கும் மற்றொரு சாதகம் என்னவென்றால், பாசிட்டிவ் நெட் ரன்ரேட். +0.294 ரன்ரேட்டுடன் இருக்கும் லக்னோ அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு, 46% இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் இருந்த இந்த அணி, நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்கு தளளப்பட்டுள்ளது. வெற்றி தோல்வி என மாறிமாறிவரும் இந்த அணி, ரன்ரேட்டில் மற்ற அணிகளை விட டீசண்டாகவே இருந்துவந்த நிலையில், அது சரிந்துள்ளது.

KKR
KKRPT

இந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட தகர்ந்து உள்ளது என்றே கூறலாம். இந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளோடு மோதவிருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு முன்பு வரை பெங்களூர் அணி, சிறந்த போட்டியாளராக இருந்துவந்தது. ஆனால் அந்த அணிக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு, நெட் ரன்ரேட்டில் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. ஒருவேளை 2 அல்லது 3 அணிகள் 16 புள்ளிகளை பெற்றால், அதற்கு மல்லுக்கட்டவும் சிறந்த ரன்ரேட் தேவையிருக்கிறது.

RCB players
RCB playersSwapan Mahapatra

ஹோம் க்ரவுண்ட் விட்டு வெளியில் ஆடிய போட்டிகளில் தான் சிறப்பாக விளையாடியுள்ளது பெங்களூர் அணி, இந்நிலையில் அடுத்த 3 போட்டிகளையும் வெளியில் தான் ஆடுகிறது. 6-வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணி, அடுத்து வரும் ராஜஸ்தான், ஹைதராபாத், குஜராத் ஆகிய அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் கட்டாயம் வென்றாக கட்டாயத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

தொடக்கத்தில் அரையிறுதிக்கான ரேஸில் சிறப்பான இடத்திலேயே இருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆனால் அவர்களுடைய கேப்டன் மாறிமாறி வந்தபிறகு, மோசமாக செயல்பட்டுவருகிறது.

PBKS
PBKSManvender Vashist Lav

இந்த அணியும் 10 புள்ளிகளுடன், அடுத்த 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு, 36% இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

குறைவான போட்டிகளில் விளாடிய அணியாக இருந்துவரும் சன்ரைசர்ஸ், தோல்வியிலிருந்து மீண்டு வந்து விளையாடி வருகிறது.

SRH
SRH PT

10 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் இருக்கும் இந்த அணி, அடுத்த 4 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மோசமான ரன்ரேட்டில் இருப்பது, பெரிய பாதகமாக இந்த அணிக்கு இருக்கிறது. இந்த அணி பிளே ஆஃப் செல்ல, 23% இருக்கிறது.

டெல்லி கேபிடல்ஸ்

சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு முன்புவரை டெல்லி அணியும், அடுத்தச்சுற்றுக்கான பந்தயத்தில் சிறப்பாகவே இருந்தது.

delhi capitals
delhi capitalsPTI

ஆனால் இப்போது அடுத்த 3 போட்டிகளில் வெற்றிபெற்றாலும், இறுதியில் 14 புள்ளிகளை தான் பெறும், ஒருவேளை ஏதாவது மேஜிக் நடந்தால் மட்டுமே, டெல்லி அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com