டூ பிளெசிஸ், சாம்சனுக்கு அபராதம்! புதிய IPL விதிகளால் சிக்கலாக மாறுகிறதா ஸ்லோ ஓவர்-ரேட் பிரச்சனை?

ஒரு போட்டியில் மொத்த ஓவர்களையும் வீசுவதற்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளும் போட்டிகளில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சஞ்சு சாம்சன், டூ பிளெசிஸ்
சஞ்சு சாம்சன், டூ பிளெசிஸ்டிவிட்டர்

டி20 போட்டிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள கூடாது என்பதெல்லாம் சரியான ஒன்று தான் என்றாலும், ஒரு போட்டி அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது என்றால், அப்போட்டியானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டுகிறது என்றுதானே அர்த்தம். பொதுவாக டி20 போட்டிகளில் வீரர்கள் நோ-பால், ஒய்டு பந்துகள் அதிகமாக வீசுவது மன்னிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக தான் வீரர்களின் நேர விரையம், டெக்னாலஜி விரையம் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஸ்லோ ஓவர் ரேட் பின்பற்றப்பட்டு, அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

பர்னெல்
பர்னெல்டிவிட்டர்

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அதிகநேரம் எடுத்துக்கொள்ளும் போட்டிகள் எல்லாமே, ஸ்லோ ஓவர் ரேட்டின் வரைமுறைக்குள் தான் வருகிறது என எடுத்துக்கொள்ள முடியாது இல்லையா. ஏனென்றால் இறுதி பந்துவரை செல்லும், அதிக நெருக்கடியான போட்டிகள் எல்லாமே கூடுதலான நேரங்களை எடுத்துக்கொள்வது இயல்பானது தானே. அப்படி வீரர்களின் தரப்பில் இருந்து தவறு நிகழாத போட்டிகள், அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் ரசிகர்களின் தரப்பில் இருந்து எந்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதில்லை.

ஆனால், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பல போட்டிகள், ஸ்லோ ஓவர் ரேட் பிரச்சனையை சந்தித்து வருகின்றன. அதன் அடிப்படையில் "லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் டூ பிளெசிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும், ஸ்லோ ஓவர் ரேட் அடிப்படையில் தலா 12 லட்சம் அபராதம்" விதிக்கப்பட்டுள்ளது. இதனை தாண்டி பல அணியின் கேப்டன்கள் எச்சரிக்கை செய்யப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

புதிய ஐபிஎல் விதிகள், ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு வழிவகுக்கிறதா?

வீரர்களால் மந்தமான சூழ்நிலை ஏற்பட்டாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஐபிஎல் விதிகளாலும், அதிக நேரவிரையம் ஏற்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதில் நோ-பால் மற்றும் ஒய்டு பந்துகளுக்கு வீரர்கள் ரிவ்யூ கேட்கும் விதிகளானது, களத்தில் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதிலும் ஒய்டு ரிவ்யூ அழைப்புகள், மூன்றாவது அம்பயரின் கவனித்திற்கு சென்று அதிக நேரம் பிடிக்கிறது.

MS Dhoni
MS DhoniTwitter

பல போட்டிகளில் அவுட்டுகள், ஒய்டுகளாக கொடுக்கப்பட்டு, பின்னர் ரிவர்ஸ் செய்யப்பட்டன. மேலும் உயரம் அதிகமாக வீசப்பட்டதாக பல பந்துகள், ரிவ்யூ பேட்டர்களால் ரிவ்யூ கேட்கப்படுகின்றன. இப்படி புதிய ஐபிஎல் விதிகளும் நேர விரையத்தில் முக்கிய பங்காற்றும் நிலையில், பெரிய குழப்பம் பார்க்கும் ரசிகர்களுக்கே ஏற்படுகிறது.

இந்த புதிய ஐபிஎல் விதிகளை பலபேர் ஆதரித்தாலும், சில ரசிகர்கள் எதற்காக இந்த விதி என்றும், இப்படியே தொடர்ந்தால் டெக்னாலஜியை மட்டுமே வைத்துகொண்டு, எதிர்காலத்தில் அம்பயர்களே களத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர். ” அவரே பாம் வைப்பாராம், அப்புறம் அவரே அதை எடுப்பாராம்” எனும் வசனம் போல் “நீங்களே ரூல்ஸும் போடுவிங்க, நீங்களே அபராதமும் கொடுப்பிங்களா” என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com