ENG-ஐ வெளியேற்ற வேண்டுமென்றே ஸ்காட்லாந்துக்கு எதிராக மோசமாக விளையாடுவோமா? - பாட் கம்மின்ஸ் விளக்கம்

இங்கிலாந்தை சூப்பர் 8 சுற்றுக்கு வரவிடாமல் தடுக்க ஆஸ்திரேலியா அணி வேண்டுமென்றே தோற்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்web

2024 டி20 உலகக்கோப்பையானது பரபரப்பான மோதல்களுக்கு பிறகு சூப்பர் 8 சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது. 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், “தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா” முதலிய 6 அணிகள் சூப்பர் 8 சுற்றில் தங்களுடைய இடத்தை உறுதிசெய்துள்ளன. நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளே அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டன.

மீதமிருக்கும் 2 இடங்களுக்காக ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து முதலிய அணிகளுக்கு இடையே இன்னும் மோதல்கள் இருந்துவருகின்றன.

பாட் கம்மின்ஸ்
“AllOut பண்ணா தான் வெல்ல முடியும்..” - பொதுவான மரபை உடைத்த ரோகித்-பும்ரா! இந்தியா வென்றது எப்படி?

சூப்பர் 8 செல்ல இங்கிலாந்துக்கு என்ன தேவை?

ஒரே குரூப்பில் இருக்கும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல போராடிவருகின்றன. 3 போட்டிகளில் விளையாடியிருக்கும் இரு அணிகளில் ஸ்காட்லாந்து 2 வெற்றி 1 டிரா உடன் 5 புள்ளிகளுடனும், இங்கிலாந்து அணி ஒரு வெற்றி 1 டிரா மற்றும் 1 தோல்வி என 3 புள்ளிகளுடனும் பட்டியலில் நீடிக்கின்றன.

eng
eng

இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவவேண்டும், இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் வென்று ஸ்காட்லாந்தின் ரன்ரேட்டை விட அதிகமாக பெறவேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக தோற்றால் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும்.

eng vs oman
eng vs omanpt web

அதேபோல இங்கிலாந்தை மீறி ஸ்காட்லாந்து தகுதிபெற வேண்டுமானால் ஆஸ்திரேலியா அணியை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி நமீபியாக்கு எதிராக தோல்வி அடைய வேண்டும், அல்லது அந்தப் போட்டி மழையால் டிரா ஆகவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாட் கம்மின்ஸ்
“பணத்துக்காக IPL போனால் இதுதான் நடக்கும்” ட்ரோல் செய்த PAK ரசிகர்.. பங்கமாக கலாய்த்த முன். NZ வீரர்!

ஹசல்வுட் சொன்ன சர்ச்சைக்குரிய கருத்து!

இங்கிலாந்து அணியின் சூப்பர் 8 தகுதிகுறித்து பேசியிருந்த ஹசல்வுட், “இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும், இங்கிலாந்து அணி அவர்களுடைய நாளில் பலம் வாய்ந்த அணியாக இருப்பார்கள். ஒருவேளை அவர்கள் தகுதி பெற்றால் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கூட விளையாடும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஆடவே ஆஸ்திரேலியா அணி விரும்பும், மற்ற அணிகளும் அதையே தான் விரும்புவார்கள்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பாட் கம்மின்ஸ் - ஹசல்வுட்
பாட் கம்மின்ஸ் - ஹசல்வுட்

ஹசல்வுட் கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஏனென்றால் எந்த ஒரு அணியும் தோல்வியை நோக்கியோ அல்லது இன்னொரு அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற விடாமல் செய்வதற்கோ விளையாட கூடாது. இது ரசிகர்களிடையேயும் விவாதப்பொருளாக மாறியது.

பாட் கம்மின்ஸ்
சூப்பர் 8: இறுதி 3 இடத்திற்கு 6 அணிகள் போட்டி.. ENG-ன் தகுதி AUS கையில்! PAK-க்கு இன்று கடைசி செக்!

வதந்தியை மறுத்த பாட் கம்மின்ஸ்..

ஹசல்வுட்டின் கருத்து வேடிக்கையாக மட்டுமே கூறப்பட்டது, அதிலிருந்து அர்த்தத்தை எடுத்து பேசுபொருளாக மாற்றியுள்ளனர், ஆஸ்திரேலியா அணி ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது என்று பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Pat Cummins
Pat Cummins

கடைசி லீக் போட்டிக்கு முன்னதாக பேசியிருக்கும் பாட் கம்மின்ஸ், “ஜோஷியுடன் நான் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தேன், அவர் அதைப் பற்றி நகைச்சுவையாகவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் கூறிய விதத்திலிருந்து மாற்றி அதை பேசுபொருளாக மாற்றியுள்ளனர். நாங்கள் ஸ்காட்லாந்துக்கு எதிராக விளையாடுவதில் எங்கள் முழு முயற்சியையும் வெளிப்படுத்துவோம், அவர்கள் இதுவரை ஒரு அற்புதமான உலகக்கோப்பையை கொண்டிருக்கின்றனர் மற்றும் ஒரு வலிமையான எதிரியாக இருப்பார்கள். ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது” என்று கம்மின்ஸ் கூறினார்.

பாட் கம்மின்ஸ்
யார் சேவாக்? அவருடைய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை! - ஷாகிப் அல் ஹசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com