இனி டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் ரோல் தேவையில்லை! வீரர்கள் அவரவர் பலத்திற்கு ஆடவேண்டும்! -ரோஹித் சர்மா

நீங்கள் தொடக்கத்தில் 3 அல்லது 4 விக்கெட்டுகள் இழக்காத வரை ஆங்கர் ரோல் செய்யத்தேவையில்லை, குறைந்த பந்துகளில் 30-40 ரன்கள் எடுத்துவிட்டாலே பெரிய இலக்கை அடையமுடியும் என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
Rohit Sharma
Rohit SharmaTwitter

எத்தனை புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதை இன்னும் சிறப்பாக எடுத்துச்சென்று ரசிகர்களை மேலும் ரசிக்க வைத்து கட்டிப்போட்டு வருகிறது டி20.

Rohit SHarma
Rohit SHarmaPTI

இந்நிலையில் டி20 விளையாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் நம்புகிறார். அவர் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையில் பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக இன்னும் தனது திறனை ஆராய்வதில் உறுதியாக உள்ளார். இன்னிங்ஸின் ஆரம்பத்தில் ஒரு அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்து ஆபத்தான நிலைக்கு செல்லாதவரை, டி20 போட்டியில் ஆங்கர் தேவையில்லை என்று வலியுறுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல வீரர்கள், டி20 கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பல்வேறு உத்திகளையும், மனநிலையையும் பின்பற்றுகிறார்கள் என்று மேலும் கூறினார்.

டி20-ல் இனி ஆங்கர் ரோல் தேவையில்லை!

ஜியோ சினிமாவுக்கான நேர்காணலில் பேசியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, “நான் டி20 வடிவத்தில் பல வருடங்களாக விளையாடிவருகிறேன். சிறப்பாகவும் செயல்பட்டுள்ளேன் என நம்புகிறேன். ஆனால் தற்போது டி20 என்பது எப்படி மாறியிருக்கிறது, அதை மற்ற வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்கும் போது, இனி டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் ரோல் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு போட்டியில் எப்போது உங்களுக்கு ஆங்கர் ரோல் தேவையென்றால், விரைவாகவே 20 ரன்களில் 3 அல்லது 4 விக்கெட்டுகளை இழக்கும் போது தேவைப்படலாம். மற்ற நாட்களில் நீங்கள் ஆங்கர் ரோல் விளையாட தேவையில்லை. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் 3 அல்லது 4 விக்கெட்டுகளை நீங்கள் இழக்கப்போவதில்லை.

7 பேட்ஸ்மேன்களும் அவர்களுடைய ரோல்களில் விளையாட வேண்டும்!

அனைத்து வீரர்களும் தங்களுடைய மனநிலையையும், ஆட்ட அனுகுமுறையையும் வித்தியாசமாக செயல்படுத்தி ஆடிவருகின்றனர். ஒருவேளை நீங்கள் அதிரடிக்கு திரும்பவில்லை என்றால், எதிரணியால் நீங்கள் அடித்து நொறுக்கப்படுவீர்கள். ஒரு அணியில் இருக்கும் 7 பேட்ஸ்மேன்களும் அவர்களுடைய ரோலிற்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

 Rohit Sharma
Rohit Sharma Kunal Patil

குறைந்த பந்துகளில் 30-40 ரன்களை எடுத்துவிட்டாலே, உங்களுடைய அணிக்கு தேவையான நல்ல ரன்கள் வந்துவிடும். அதை நீங்கள் ஆங்கர் ரோல் விளையாடித்தான் செய்யவேண்டியதில்லை. டி20 விளையாட்டு மாறிவிட்டது என்று ரோகித் கூறியுள்ளார்.

அடுத்தடுத்து 0 ரன்களில் வெளியேறினேன், ஆனால்..

நான் மேற்கூறிய வகையில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். உண்மை தான் அந்த முயற்சியில் நான் 2 முறை 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினேன். ஆனால் தற்போதைய டி20 கிரிக்கெட்டுக்கு தகுந்தவாறு, நான் இன்னும் என்னுடைய பேட்டிங் திறனை ஆராய்ந்து வருகிறேன். அந்த முயற்சியில் நான் தோல்வியை சந்தித்தாலும் அது என்னை பெரிதாய் பாதிக்கப்போவதில்லை.

பொல்லார்டை போல் பெரிய ஹிட்டர் இல்லை. என் பலம் இதுதான்!

எனக்கு தெரியும் பொல்லார்ட், டிம் டேவிட்டை போன்று நான் பெரிய ஹிட்டர் எல்லாம் இல்லை. அவர்களால் 100மீட்டர் வரை சிக்சர்களை அடிக்க முடியும், ஒருபோதும் என்னால் அவர்களை போல் பெரிய ஷாட்களை எல்லாம் ஆடமுடியாது. ஆனால் அதையே நான் ஏன் செய்யவேண்டும்.

Rohit Sharma - Pollard
Rohit Sharma - PollardEspn

ஒருவேளை நான் 100 மீட்டர் சிக்சர் அடிக்கவேண்டும் என்றால், அதற்கு 8 ரன்கள் கொடுத்தால் நான் அதை செய்வேன். சிக்சர் வேண்டுமென்றால் 80 மீட்டர் வரை என்னால் அடித்து ரன்களை பெற முடியும். பெரிய ஹிட் அவர்கள் பலம் என்றால், சிறந்த டைமிங்கில் மிடில் பேட்டில் ஆடுவது என்னுடைய பலம் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com