ஜானி பேர்ஸ்டோவை Replace செய்த மும்பை இந்தியன்ஸ்.. Playoff-க்காக 3 புதிய வீரர்கள் சேர்ப்பு!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரானது பாதியில் நிறுத்தப்பட்டு ஒருவாரம் தள்ளிப்போனது. இதனால் ஐபிஎல்லில் ஒரு பங்காக இருந்த பல வெளிநாட்டு வீரர்கள், தங்களுடைய நாட்டிற்காக விளையாடுவதற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனால் பல வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு கிடைக்கமாட்டார்கள் என்பதால், ஐபிஎல் அணிகள் மீதமிருக்கும் போட்டிகளுக்கு தற்காலிக மாற்றுவீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போது இணைக்கப்படும் வீரர்கள் 2026 ஐபிஎல்லில் தக்கவைக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஜேக் ஃப்ரேசருக்கு பதிலாக முஸ்தஃபிசூரை டெல்லி அணியும், லுங்கி இங்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே பவுலர் முசரபானியை ஆர்சிபி அணியும் இணைத்துள்ளனர். அந்தவரிசையில் 3 மாற்று வீரர்களை அறிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஜானி பேர்ஸ்டோவ், ரிச்சர்ட் க்ளீசன், சரித் அசலங்கா
2025 ஐபிஎல் தொடருக்கான 4 பிளேஆஃப் இடங்களில் 3 இடங்களை ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நிரப்பிவிட்டன. மீதமிருக்கும் 4வது இடத்திற்காக மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.
மீதமிருக்கும் 2 போட்டியில் வென்றால் பிளேஆஃப் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி உறுதிசெய்யும், இதில் முக்கிய போட்டியாளாரான டெல்லி கேபிடல்ஸை எதிர்த்து நாளை மும்பை அணி களம்காண்கிறது. நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி பிளேஆஃப் செல்வதற்கான ரேஸில் முன்னிலை வகிக்கும்.
இந்த சூழலில் 3 புதிய தற்காலிக மாற்று வீரர்களை அறிவித்துள்ளது. வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கெல்டன் மற்றும் கார்பின் போஷ் 3 வீரர்களுக்கு மாற்றாக ஜானி பேர்ஸ்டோவ், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் சரித் அசலங்கா ஆகியோரை மும்பை அணி தேர்வு செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பிளேஆஃப் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்.
ஜானி பேர்ஸ்டோ 5.25 கோடிக்கும், ரிச்சர்ட் க்ளீசன் 1 கோடி மற்றும் அசலங்கா 75 லட்சத்திற்கும் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.