விதிமீறல்களில் ஈடுபட்ட பிரபலங்களின் பட்டியல்.. இதிலும் முதலிடமா.. இதெல்லாம் நியாயமா தோனி..?

இந்தியாவில் அதிகளவில் விளம்பர விதிமீறல்களில் ஈடுபட்ட பிரபலங்களின் பட்டியலில், தோனி முதல் இடத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் தங்களுடைய சாதனைகள் மூலம் புகழ்பெறுகின்றனர். அவர்களை விளம்பர நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்கின்றன. அந்த வகையில், நம் நாட்டில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில் பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்களே அதிக அளவில் இடம்பெறுகின்றனர். அதாவது, மற்ற விளையாட்டு வீரர்களைவிட கிரிக்கெட் வீரர்களை அனைத்துத் தரப்பு விளம்பரங்களிலும் இடம்பெறுகின்றனர்.

அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். 42 வயதான தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்து பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் அவர் அடுத்த ஆண்டும் விளையாட வேண்டும் என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

Dhoni
Dhoni R Senthil Kumar

அதற்குக் காரணம், நடப்பு சீசனிலும் அவருடைய ஆட்டம் ரசிகர்களைக் கவர்ந்திழுப்பதாக உள்ளது. அவர் கடைசி நேரத்தில் இறங்கினாலும், அவருடைய ராக்கெட் சிக்ஸருக்காகத்தான் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். முன்னதாக அவ்வணியைச் சேர்ந்த தொடக்க மற்றும் இடைநிலை பேட்டர்கள் அதிக ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்து வெளியே செல்லும்போதுகூட, களமிறங்கும் தல தோனிக்குத்தான் கரவொலியும், விசில் சத்தமும் விண்ணை அதிரவைக்கின்றன. அதாவது, அவருக்கான மதிப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்து விடவில்லை.

இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள பல விளம்பர நிறுவனங்கள் அவரை தங்கள் பிராண்ட்களுக்கு தூதுவராக்கி விளம்பரங்கள் எடுத்து வெளியிடுகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகளவில் விளம்பர விதிமீறல்களில் ஈடுபட்ட பிரபலங்களின் பட்டியலில், தோனி முதல் இடத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பிரபலங்கள் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு மட்டும் நடித்துள்ள பிரபலங்களுக்கு எதிரான புகார்கள் 803 சதவிதிகம் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதில், முதலிடத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தோனி இதுபோல் 10 விதிமீறல் விளம்பரங்களில் நடித்திருப்பதாக, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் தெரிவித்துள்ளது. தோனி மட்டுமில்லாமல் இதுபோல விளம்பரங்களில் நடிக்கும் பல இந்திய பிரபலங்களும் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com