MS Dhoni
MS DhoniTwitter

''என் கிரிக்கெட் வாழ்க்கையின்..." - ஓய்வு குறித்து தோனி சூசக பேச்சு!

"சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று பேசியுள்ளார் எம்.எஸ்.தோனி.
Published on

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி 4வது வெற்றியை பெற்றது.

போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் மகேந்திரசிங் தோனி, ''என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது கடைசி கட்டத்தில் இருக்கின்றேன். இதனால் ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை ரசிகர்கள் எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்திருக்கிறார்கள்.

MS Dhoni
MS DhoniTwitter

நான் எப்போதுமே பந்து வீச்சாளர்களிடம் 'ஃபீல்டிங்கை இப்படி நிறுத்துகிறேன், அதற்கு தகுந்த மாதிரி வீசு' என்றெல்லாம் கூற மாட்டேன். சில சமயத்தில் சில பேட்ஸ்மேன் வித்தியாசமாக விளையாடினால் அப்போது மட்டும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். மற்றபடி எந்த இடத்தில் எந்த ஃபீல்டர் வேண்டும் என்று பவுலர்களை முடிவு செய்ய முழு சுதந்திரம் வழங்குவேன்.

வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பனிப்பொழிவு இருக்காது என நினைத்தேன். இதனால் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தேன். எனினும் எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை தேடி தந்தார்கள்'' என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com