நேபாள கிரிக்கெட்டின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்பழுக்கற்ற ரசிகர்கள் - மான்டி தேசாய்

"நேபாள கிரிக்கெட்டின் மிகப் பெரிய வெற்றியே இந்த அப்பழுக்கற்ற ரசிகர்கள் தான்" - நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்Twitter

இந்த டி20 உலகக் கோப்பையில் பல்வேறு விஷயங்கள் கிரிக்கெட் ரசிகர்களின், விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில் முக்கியமானது நேபாள கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு.

அந்த அணி இந்த உலகக் கோப்பையில் எந்த மூளைக்குச் சென்றாலும் கூட்டமாகச் சென்றாலும், என்ன மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், எவ்வளவு மழை கொட்டினாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு அளித்தார்கள். இதுபற்றி பேசிய நேபாள அணியின் பயிற்சியாளர் மான்டி தேசாய், அந்த ரசிகர்களே நேபாள கிரிக்கெட்டின் சொத்து என்று கூறியிருக்கிறார்.

நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்

"நேபாள கிரிக்கெட்டின் மிகப் பெரிய வெற்றியே இந்த அப்பழுக்கற்ற ரசிகர்கள்தான். அவர்களை அப்பழுக்கற்றவர்கள் என்று நான் கூறக் காரணம், அவர்களை நான் எனது விழிகள் வழியாகப் பார்க்கிறேன். கீர்த்திபூரில் இருக்கும் திருபுவன் பலகலைக்கழக மைதானத்தில் நான் நடக்கும்போதெல்லாம் பல்வேறு நேபாள ரசிகர்களை நான் பாத்திருக்கிறேன். அவர்களெல்லாம் தினசரி வேலை செய்து பிழைத்து வருபவர்கள். ஆனால் அப்படி இருந்தும் இந்த இளம் அணியின் கனவுக்கு ஆதரவாக இருக்க தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வந்தார்கள்.

முன்பெல்லாம் மழை வரும்போது அவர்கள் கடைசி வரை குடை பிடித்து நின்று அணிக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். இந்த டி20 உலகக் கோப்பைக்கு நாங்கள் தகுதி பெற்றபோது கூரை மீது ஏறியும், மரத்தின் மீது ஏறியும் அவர்கள் கொண்டாடினார்கள். ரசிகர்கள் என்ற வார்த்தைக்கு மிகவும் ஆழமான அர்த்தம் இருக்கிறது. அவர்கள்தான் நேபாள கிரிக்கெட்டின் 12வது ஆளாக இருந்திருக்கிறார்கள்.

நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
4-4-0-3: 0 எகானமி.. வீசிய 4 ஓவர்களும் மெய்டன்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்த லக்கி பெர்குசன்!

இப்போது அவர்கள் தங்களின் எமோஷன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும். சில நேரங்களில் கிரிக்கெட் மிகவும் கொடூரமானது. தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. நாங்கள் இந்தத் தொடரில் தாக்குப்பிடிக்க அந்தக் கோட்டைத் தாண்டவேண்டிய தேவை மட்டுமே இருந்தது.

நேபாளத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த இளம் கனவுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இந்த அரங்கில் நெடுந்தொலைவு வந்திருக்கிறோம்" என்று கூறினார் மான்டி தேசாய்.

நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்

ஒவ்வொரு இடத்துக்கும் சென்று தங்கள் அணிக்கு ஆதரவு அளித்த நேபாள ரசிகர்கள் கிட்டத்தட்ட தங்கள் அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பார்த்திருந்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றியின் விளிம்பு வரை சென்ற அந்த அணி, கடைசிப் பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இருந்தாலும் இந்தத் தொடரில் தைரியமான கிரிக்கெட்டை விளையாடி அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது அந்த அணி. இதற்கு பயிற்சியாளர் மான்டி தேசாய் ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்கிறார். அந்த அணியின் உளவியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்தவரான தேசாய்.

நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
கள்ளக்குறிச்சி | உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்றவர்களே விஷச்சாராயம் அருந்திய அதிர்ச்சி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆடிய அந்த அணி கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது. அந்தப் போட்டிக்கு முன்பாக தேசாய் கூறிய விஷயங்கள், இந்த நேபாள அணி எந்த அளவுக்கு தங்கள் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது என்பதை உணர்த்தும்.

"நாங்கள் எங்களின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறோம். அதனால் மற்றவர்களின் திட்டங்களைக் கெடுப்பது பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. எங்கள் டிரஸ்ஸிங் ரூமுக்கு சொல்லப்பட்ட மெசேஜ் இதுதான். 'நாம் இன்னும் கற்பனை உலகத்தில் தொடர்ந்து வாழவேண்டும். அந்த உலகத்தில் நாம் வெற்றிக் கோட்டைத் தாண்டிவிட்டதாக அனைவரும் நம்பவேண்டும்'. நாங்கள் மூன்று புள்ளிகள் பெற்றிருப்பதாகவும், வங்கதேசதுக்கான எதிரான போட்டியில் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கொண்டிருப்பதாகவும் நாங்கள் நினைக்க விரும்பினோம்.

நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்

அப்படி ஒரு மன நிலையோடு விளையாடினால் எங்களால் கடைசி வரை போராட முடியும், எல்லைக் கோட்டைக் கடக்க முடியும், வெற்றி பெற்ற ஒரு பெருமையான நினைவோடு எங்களால் திரும்பப் போக முடியும், அதன்பிறகு வேண்டுமானாலும் நடந்தது, நடந்திருக்கவேண்டியதைப் பற்றிப் பேசலாம். ஆனால், இப்போது நாங்கள் ஒரு அசத்தலான செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் நேபாளம் போன்ற ஒரு இளம் அசோஷியேட் அணியின் மன வலிமை வெளிப்படும். நாங்கள் இதுவரை முன்னேறி வந்தததற்குக் காரணமான அணுகுமுறையை நினைவுகூர்வது மிகவும் முக்கியம்" என்று கூறியிருந்தார் அவர்.

மேலும், "இதுபோன்ற டெஸ்ட் அணிகளுக்கு எதிராக எங்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்போது எங்களால் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இதுபோல் கடைசிப் பந்து வரை செல்லும் யுத்தங்களை வெல்ல அதீத தைரியம் தேவை என்று எனக்குத் தெரியும். அதைத்தான் இந்த இளம் அணியில் புகுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

டி20 கிரிக்கெட்டில் பெரிய அணி, சிறிய அணி என்றெல்லாம் எதுவும் இல்லை. ஒவ்வொரு அணியையும் சமமாகவே பார்க்க நினைக்கிறோம். ஏனெனில் டி20 என்பது பெரும்பாலும் அந்தத் தருணத்தைப் பொறுத்தது. வெறும் 20 ஓவர்கள் தான் அந்த ஆட்டமே. அப்படி இருக்கும்போது எந்தத் தருணத்தில் போட்டி மாறும் என்பதை யாரும் சொல்ல முடியாது.

நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்
நேபாள பயிற்சியாளர் மான்டி தேசாய்

எங்கள் பார்வை ஒன்றுதான். எல்லா அணியையும் சமமாகப் பார்க்கவேண்டும். அக்ரஸிவான கிரிக்கெட் ஆடவேண்டும். நாங்கள் எங்கள் திட்டங்களில் தீர்க்கமாக இருப்போம். எதிரணி யார் என்பதில் எந்தக் கவலையும் இல்லை. அனைவருக்கு எதிராகவும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவே முயற்சிப்போம்" என்று கூறினார் மான்டி தேசாய்.

அவர் பேசியது, அந்த அணி எப்படி டி20 கிரிக்கெட்டை அணுகுகிறது என்பதையும், எப்படி இனி விளையாடப் போகிறது என்பதையும் தெளிவாக உணர்த்தியிருக்கிறது. அதை அவர்களால் தொடர்ச்சியாகச் செய்யமுடியும் என்றால், நிச்சயம் இப்போது அடைந்திருப்பது விட மிகப் பெரிய எழுச்சியை அந்த அணியால் எழ முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com