யார் சாமி நீ... உடம்பே சிலிர்த்துடுச்சு... MI-ஐ கதறவிட்ட Ashutosh..!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Ashutosh
Ashutoshpt desk

வெல்லவே முடியாத இடத்தில் இருக்கும் போட்டியை ஒரு தனிவீரன் மாத்திரம் உயிரைகொடுத்து விளையாடி காப்பாற்றி எடுத்துவருவதெல்லாம், கிரிக்கெட்டை நேசிக்கும் ஒரு ரசிகனுக்கு புல்லரிப்பை கொடுக்கக்கூடியது. அதுவும் உலகத்தின் தலைசிறந்த ஜாம்பவான் பந்துவீச்சாளர் எதிரணியில் இருந்தும், நீங்க ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க என புதியவீரன் வந்து வேடிக்கை காட்டுவதெல்லாம் ஐபிஎல்லுக்கே உரித்தான ஒரு அழகு. இதனால் தான் ஐபிஎல் தொடரை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கின்றனர்.

Surya kumar
Surya kumarpt desk

78 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ்!

ஒரு பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம்கரன் பந்துவீச்சை தேர்வுசெய்ய, மும்பை அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு எதிராக, அற்புதமாக பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ரன்களை விட்டுக்கொடுக்கமால் டைட்டாக பந்துவீசி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. உடன் இஷான் கிஷனும் 8 ரன்னில் வெளியேற, இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ரன்களை எடுத்துவர போராடினர்.

Ashutosh
IMPACT PLAYER விதிமுறை | “என்ன இருந்தாலும் இது சரி கிடையாது” - ரோகித் சர்மா சொன்னதென்ன?

முதலில் ரிதமை பிடிக்க முடியாமல் தடுமாறினாலும், பின்னர் அதிரடிக்கு திரும்பிய ரோகித் சர்மா 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். உடன் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் கலக்கிப்போட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, ஒரு பெரிய டோட்டலுக்கான அடித்தளத்தை போட்டது. ஆனால் ரோகித்தை 36 ரன்னிலும், ஆபத்தான வீரராக மாறிய சூர்யகுமார் யாதவை 78 ரன்னிலும் வெளியேற்றிய பஞ்சாப் கேப்டன் சாம்கரன் மும்பை அணியை இழுத்துப்பிடித்தார்.

MIvPBKS
MIvPBKSpt desk

இடையில் பஞ்சாப் அணி கண்ட்ரோல் செய்தாலும், இறுதியாக வந்து அதிரடியில் மிரட்டிய திலக் வர்மா 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு கலக்கிப்போட்டார். உடன் டிம் டேவிட்டும் அவருடைய பங்கிற்கு 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாச 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.

14 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப்..

பேட்டிங்கில் பெரிய ஃபார்மில் இல்லாமல் தடுமாறிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, எப்படி சேஸ் செய்யப்போகிறோம் என்ற கவலையுடன் களமிறங்கியது. அதற்கேற்றார் போல் பந்துவீச்சில் ஒரு மாயாஜாலமே நிகழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, ஒரு Dream டெலிவரியில் ரைல் ரோஸ்ஸோவின் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்தார். எப்போதும் வலது கை வீரர்களுக்கு மட்டுமே ரிவர்ஸ் ஸ்விங் வீசி ஸ்டம்புகளை பறக்கவிடும் ஜஸ்பிரித் பும்ரா, இந்தமுறை ஒரு இடது கை பேட்ஸ்மேனை ஒரு நார்மல் லெந்த் டெலிவரியில் ரிவர்ஸ் ஸ்விங் வீசி ஸ்டம்புகளை உடைத்தது புல்லரிக்க வைத்தது. பும்ராவின் இந்த விக்கெட் ”எதனால் இவரை ஜாம்பவான் பவுலர்” என்று கூறுகிறார்கள் என்பதற்கு இலக்கணமாய் அமைந்தது.

Ashutosh
’படுத்தே விட்டானய்யா..’ MI போட்டியில் ஏற்பட்ட 'Toss FIXING' பிரச்னை! கேமராமேன் செய்த தரமான சம்பவம்!
Bumrah
Bumrahpt desk

அடுத்தடுத்து பும்ரா 2 விக்கெட்டுகள், ஜெரால்ட் கோட்ஸீ 2 விக்கெட்டுகள் என போட்டிப்போட்டு விக்கெட் வேட்டை நடத்த, 14 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அவர்களின் டாப் ஆர்டர் வீரர்கள் 6, 0, 1, 1 என சொற்ப ரன்களில் நடையை கட்ட, 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஷசாங் சிங் மற்றும் ஹர்ப்ரீத் இருவரும் அணியை மீட்டு எடுத்துவர போராடினர். 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை ஸ்ரேயாஸ் கோபால் பிரித்துவைத்தார். உடன் களத்திற்கு வந்த ஜிதேஷ் சர்மா, எதற்கு அணியில் இருக்கிறோம் என தெரியாமலேயே வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

போட்டியில் உயிரை கொண்டுவந்த ஷசாங் - அஷுதோஸ்!

அவ்வளவுதான் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணியில், கடைசி பேட்டிங் ஜோடியாக ஷசாங் சிங் மற்றும் அஷுதோஸ் இருவரும் 10வது ஓவருக்கே வந்துசேர்ந்தனர். எப்படியும் அடுத்த 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடுவார்கள், மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்யப்போகிறார்கள் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது.

Ashutosh
Ashutoshpt desk
Ashutosh
”தோனியை WC-க்கு கொண்டுவரலாம் தான்..ஆனால்” - விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்விக்கு ரோகித் நச் பதில்!

ஆனால் கடந்த போட்டிகளில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த ஜோடி, ”நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை” என்று மீண்டும் ஒருமுறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக காட்டடியை அடிக்க ஆரம்பித்தனர். ஒரு பேட்டிங் சூறாவளிக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஷசாங் சிங் தான். 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்த ஷசாங் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியை மிரட்டிவிட, 28 பந்தில் 7 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என இருக்கும் எல்லாபவுலர்களையும் வெளுத்துவாங்கிய அஷுதோஸ் சர்மா மரணஅடி அடித்தார்.

நம்பமுடியாத ஆட்டம் ஆடிய அஷுதோஸ் சர்மா..

பும்ராவிற்கு எதிராக முட்டிபோட்டு ஸ்பின்னரை அடிப்பது போல் அடித்த அஷுதோஸ் சர்மா புல்லரிக்க வைத்தார். ’யார் சாமி நீ? இந்த அடி அடிக்கிற’ என பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அஷுதோஸ் சர்மாவின் பேட்டிங்கை ”இது உண்மை தானா” என நம்பமுடியாமல் பார்த்தனர்.

MI vs PBKS
MI vs PBKSpt desk

ஷசாங் சிங் 41 ரன்னில் வெளியேறினாலும், இறுதிவரை போட்டியை விட்டுக்கொடுக்காத அஷுதோஸ் சர்மா “யார் பந்துவீச வந்தாலும் மரண அடி கொடுத்தார்”. கடைசி 5 ஓவருக்கு 52 ரன்கள் தேவையென போட்டி மாற, மத்வால் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட அஷுதோஸ் 24 ரன்களை எடுத்துவந்து மிரட்டிவிட்டார். “அவ்வளவுதான் சோலி முடிஞ்சது” என்ற நிலைமைக்கே மும்பை இந்தியன்ஸ் செல்ல, முக்கியமான தருணத்தில் பும்ராவை எடுத்துவந்த ஹர்திக் பாண்டியாவின் Move-ம் கைக்கொடுக்காமல் போனது. பும்ராவை இந்தமுறை கவனமாக பார்த்து விளையாடிய அஷுதோஸ் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டார்.

3 ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டுமே தேவையென போட்டி மாற, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கைகளே ஓங்கியிருந்தது. ஆனால் 18வது ஓவரை வீசவந்த கோட்ஸீக்கு எதிராக அவரசப்பட்டு தூக்கியடித்த அஷுதோஸ் சர்மா, பும்ராவிடம் மாட்டாமல் கோட்ஸீயிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அஷுதோஸ் வெளியேறினாலும் கடைசியாக வந்து சிக்சரை பறக்கவிட்ட ரபாடா போட்டியில் உயிரை கொண்டுவந்தார். கடைசி 6 பந்துக்கு 12 ரன்கள் என போட்டி மாற, தேவையில்லாமல் ரன்அவுட்டான ரபாடா விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஒரு பரபரப்பான நகம்கடிக்கும் போட்டியின் முடிவில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

MI
MIpt desk

பவுலிங்கில் RCB அணியாக மாறிவரும் மும்பை.. என்ன மாற்ற வேண்டும்?

என்ன தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றாலும், இன்றைய போட்டியின் ஹீரோவாக அஷுதோஸ் சர்மாவே ஜொலித்தார். அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 ஓவரில் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளுடன் ஆட்டநாயகனாக மாறினார். பும்ரா ஒருவர் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரே சிறந்த பவுலராக ஜொலித்துவருகிறார், மற்ற பவுலர்கள் அனைவரும் 11 எகானமியுடன் மோசமான பந்துவீச்சையே அனைத்து போட்டிகளிலும் வெளிப்படுத்திவருகின்றனர். பும்ராவை எடுத்துவிட்டு பார்த்தால் மும்பை அணி இன்னொரு ஆர்சிபி அணியாகவே தெரிகிறது.

விரைவில் அவர்கள் நுவன் துஷாராவை பிளேயிங் லெவனில் எடுத்துவந்து பந்துவீச்சை வலுப்படுத்தவேண்டும், அதேநேரத்தில் முகமது நபி போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னரை அணியில் வைத்துக்கொண்டு ஏன் பயன்படுத்தாமல் இருந்துவருகிறார்கள் என்ற கேள்வியும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com