’BOWLED’ ஆனபிறகும் DRS கேட்ட MI வீரர்.. கிரிக்கெட் களத்தில் சிரிப்பலை! #viralvideo
ஐபிஎல் முடிந்ததையொட்டி அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் பிரான்சைஸ் டி20 தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 34 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் ‘சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்’ முதலிய 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
இந்த 6 MLC அணிகளில் நான்கு அணிகள் ஐபிஎல் உரிமையாளர்களின் அணிகளாகும். இதில் MI நியூயார்க் (மும்பை இந்தியன்ஸ்), டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மற்றும் சியாட்டில் ஓர்காஸ் (டெல்லி கேபிடல்ஸ்) ஆகியவை 4 ஐபிஎல் உரிமையாளர்களால் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் 3வது மேஜர் லீக் சீசனானது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் சூழலில், நேற்றைய போட்டியில் MI நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின
BOWLED ஆனது தெரியாமல் ரிவ்யூ கேட்ட MI வீரர்..
பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவரில் 246/4 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய நியூயார்க் அணி 199 ரன்கள் மட்டுமே அடித்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதில் இரண்டாவதாக பேட்டிங் செய்த MI நியூயார்க் அணியில் 5வது வீரராக பேட்டிங் செய்ய வந்த மைக்கேல் பிரேஸ்வெல் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் பவுல்டானார். ரொமாரியோ ஷெஃபர்டு வீசிய பந்து பிரேஸ்வெல்லின் அடிக்கும் முயற்சியை கடந்துசென்று ஸ்டம்பை தாக்கியது.
ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டதை அரியாத பிரேஸ்வெல் பவுல்டான பிறகும் ரிவ்யூவிற்கு சென்றார். பின்னர் அம்பயர் பவுல்ட்டானதை சுட்டிக்காட்டிய பிறகு சிரித்துக்கொண்டே வெளியேறினார். வர்ணணையாளர்கள் அனைவரும் சிரிக்க, கிரிக்கெட் களத்தில் சிரிப்பலை தொற்றிக்கொண்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.