”ஹர்திக்கும் ஒரு மனிதன்தான்” - உருகிய க்ருணால் பாண்டியா.. குடும்ப கொண்டாட்டத்தில் இடம்பெறாத நடாஷா!

ஹர்திக் பாண்டியா குறித்து அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா
க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியாஎக்ஸ், இன்ஸ்டா தளம்

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லி மற்றும் மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வீரர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், விராட் கோலி மட்டும் தன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க லண்டன் சென்றுள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய வீரர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். அவர் கடைசிக் கட்டத்தில் நேர்த்தியாக பந்துவீசி முக்கியமான இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றியது இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தது. இதை கேப்டன் ரோகித் சர்மாவே மனந்திறந்து பாராட்டி வருகிறார். அதுபோல் ரசிகர்களும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமனம் ஹர்திக் பாண்டியாவை, ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணியை வழிநடத்தி தோல்வியையே அடைந்தார். இதனால் மும்பை ரசிகர்கள் அவரைக் கடுமையாக வார்த்தைகளால் தாக்கினர். அவருக்கு எதிராக மைதானத்தில் கோஷமிட்டனர். குறிப்பாக, மும்பை மைதானத்தில் இதே ரசிர்கள் அவரைக் கிண்டல் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

தவிர, இந்த விவகாரத்துடன் குடும்ப வதந்திகளும் தலைதூக்கத் தொடங்கின. ஆனாலும் ஹர்திக் பாண்டியா எவ்வித விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே கடந்து சென்றார். ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் தற்போது பதில் அளித்து மீண்டும் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். குறிப்பாக, 2 மாதங்களுக்கு முன்பாக இதே வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது அதே மைதானத்தில் ரசிகர்களின் அன்பை ஹர்திக் பாண்டியா பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: ஒரு எருமை மாட்டுக்கு இருவர் உரிமை.. திணறிய போலீஸ்.. இறுதியில் தீர்வுகண்ட எருமை.. உ.பியில் ருசிகரம்!

க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா
குலுங்கியது மும்பை| ஹர்திக் பாண்டியாவிற்கு நன்றி சொன்ன ரோகித் சர்மா.. பாராட்டு மழையில் இந்திய அணி!

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவும் தன் குடும்பத்தினருடன் வெற்றியைக் கொண்டாட அவர் வீடு இருக்கும் பரோடாவுக்குச் சென்றார். அங்கு அவருடைய சகோதரர் க்ருணால் பாண்டியா, அவரது அம்மா மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்ட ஹர்திக், ”எனது நம்பர் 1. உனக்காக எல்லாவற்றையும் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார். எனினும், இந்தக் கொண்டாட்டத்தில் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் வராதது கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், “நானும், ஹர்திக் பாண்டியாவும் தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 10 ஆண்டுகளாகிவிட்டது. அதில் கடந்த சில நாட்களாக நாங்கள் கண்ட கனவில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு இந்தியரும் தங்கள் நாயகர்களின் ஆட்டத்தை கண்டு பாராட்டி வரும்போது, அந்த அணியில் எனது சகோதரரும் இருக்கிறார் என்பதே எமோஷனலாக உள்ளது. கடந்த 6 மாதங்களாக ஹர்திக் பாண்டியாவின் பயணம் கடினமானதாக அமைந்தது. ஒரு சகோதரராக எனக்குச் சோகத்தை அளித்தது. கிண்டல்கள் தொடங்கி ரசிகர்கள் ஏராளமான விஷயங்களை பேசத் தொடங்கினார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியாவும் உணர்ச்சியுள்ள ஒரு மனிதன் என்பதை மட்டும் நாம் மறந்துவிட்டோம்.

இதையும் படிக்க: NCW தலைவிக்கு எதிராக சர்ச்சை கருத்து.. மஹுவா மொய்த்ரா மீது பாய்ந்த வழக்கு.. விரைவில் கைது?

க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா
ஐபிஎல்லில் விரக்தி.. டி20-ல் வெற்றி.. வான்கடே மைதானத்தில் விண்ணைப் பிளந்த ‘ஹர்திக் பாண்டியா’ கோஷம்!

ஆனால் ஹர்திக் பாண்டியா அந்த கடினமான பயணத்தையும் சிரித்துக்கொண்டே எப்படியோ கடந்து வந்துவிட்டார். அது எவ்வளவு கடினமான விஷயம் என்று சகோதரனாக உணர்ந்துகொள்ள முடிகிறது. எவ்வளவு எதிர்ப்பும், கிண்டலும் துரத்தினாலும் ஹர்திக் பாண்டியா ஒருபோதும் உழைப்பை மட்டும் கைவிடவில்லை. உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்தினார். இப்போது இந்திய அணியின் நீண்டநாள் கனவை அடைய முழு உழைப்பையும் கொடுத்து வெற்றியைப் பெற்றுள்ளார்.

6 வயதில் இருந்து உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அந்த கனவை இந்திய அணிக்காக ஆடிய சில ஆண்டுகளிலேயே எட்டிப்பிடித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடும் போது ஒருபோதும் ஹர்திக் பாண்டியா சமரசம் செய்து கொண்டதில்லை. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நிலையிலும் ஹர்திக் பாண்டியாவின் கதை முடிந்தது என்று ரசிகர்கள் எழுதத் தொடங்கிய போதெல்லாம், அவர் இன்னும் பலத்துடன் கம்பேக் கொடுத்துள்ளார். பரோடாவில் பிறந்த வளர்ந்த சிறுவனுக்கு, இதைவிட பெரிய சாதனை எதுவும் கிடையாது. என் சகோதரனை நினைத்து பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்தோனேசியா| ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்.. 36 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு!

க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா
வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com