kl rahul - goenka
kl rahul - goenkaweb

தரமான ரிவென்ச்.. ஐபிஎல் வரலாற்றின் ஆகச்சிறந்த சம்பவம்.. கோயங்காவின் மூக்குடைத்த கேஎல் ராகுல்!

நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அரைசதமடித்து டெல்லியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற கேஎல் ராகுல், தன்னுடைய பெயரை மறுந்துவிடாதீர்கள் என்பது போல தன் ஜெர்சியில் உள்ள ராகுல் என்ற பெயரை பேட்டால் தட்டிக்காட்டி செல்பரேஷன் செய்தார்.
Published on

தோனியை விட ஸ்மித் கேப்டன்சியில் சிறந்தவர் என கூறியது, மைதானத்திலேயே கேஎல் ராகுலை அவமானம் செய்தது என சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் முன்னாள் ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி மற்றும் தற்போதைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா.

2022 முதல் ஐபிஎல்லில் புதிய அணியாக இணைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அப்போதைய கேப்டனான கேஎல் ராகுல் தலைமையில் 2022 மற்றும் 2023 என இரண்டு சீசனில் பிளே ஆஃப் வரை முன்னேறியிருந்தது.

கேஎல் ராகுல் - சஞ்சிவ் கோயங்கா
கேஎல் ராகுல் - சஞ்சிவ் கோயங்கா

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2024 ஐபிஎல் சீசனில் கேஎல் ராகுல் தலைமையில் லக்னோ அணி சிறப்பாக செயல்படாமல் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் த்தது. அந்த தொடரில் கேப்டன் கேஎல் ராகுலின் செயல்பாட்டில் உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா திருப்தியடையவில்லை. அது மைதானத்தில் வைத்தே ராகுலை கடுமையாக பேசி அவமானம் செய்யும்வகையில் மோசமானதாக சென்றது.

கேஎல் ராகுலுக்கு எதிராக உரிமையாளர் கோயங்கா நடந்துகொண்டது பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாகவே ராகுலை லக்னோ அணியிலிருந்து வெளியேற்றியது நிர்வாகம்.

கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்

பின்னர் 2025 ஐபிஎல் ஏலத்தில் கேஎல் ராகுலை 14 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கோயங்கா பேசுவதை விரும்பாத கேஎல் ராகுல்!

நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கேஎல் ராகுல், 7 போட்டிகளில் 64 சராசரியுடன் 3 அரைசதங்கள் உட்பட 323 ரன்களை குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 93 ரன்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிராக கேஎல் ராகுல் எப்படி விளையாடப்போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி விருந்தாக அமைந்தது. இதுதான் யா ஐபிஎல்லின் சிறந்த பழிவாங்கல் என ரசிகர்கள் கொண்டாடும் வகையில், லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அரைசதமடித்த ராகுல் ‘தன்னுடைய பெயரை மறந்துவிடாதீர்கள் என நினைவூட்டும் வகையில் ஜெர்சிக்கு பின்னால் இருந்த ராகுல் என்ற பெயரை பேட்டால் தட்டிக்காட்டி செலப்ரேசன் செய்தார்’.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் டெல்லியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற கேஎல் ராகுல் போட்டி முடிந்தபிறகு லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்காவுடன் கைகளை குலுக்கினார். அப்போது ராகுலை நிறுத்தி பேசுவதற்கு கோயங்கா முயன்றபோது, வெடுக்கென கையை எடுத்த ராகுல் அவர் பேசுவதை கேட்க விருப்பவில்லாமல் வேகமாக அடுத்தவர்களிடம் கைக்கொடுக்க சென்றார்.

அதுமட்டுமில்லாமல் வெற்றிக்கு பிறகு கேஎல் ராகுல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் தன்னுடைய பெயரை சுட்டிக்காட்டிய செலப்ரெஷன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் ராகுல் செய்த இந்த இரண்டு சம்பவங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கவனம் ஈர்க்கும் கேஎல் ராகுலின் செலப்ரேஷன்!

பொதுவாக கேஎல் ராகுல் எப்போதும் எது நடந்தாலும் அமைதியாகவே இருக்கும் ஒரு நபராகவே அறியப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கோயங்கா உடன் ஏற்பட்ட பிரச்னையின் போது கூட அவர் மைதானத்தில் அமைதியாகவே இருந்தார். மறுநாள் கோயங்கா சமாதானம் படுத்தி விருந்து வைத்ததாக வெளியிடப்பட்ட புகைப்படத்தில் கூட சிரித்த முகத்துடனே அந்த பிரச்னையை அணுகியிருந்தார்.

ராகுல், கோயங்கா
ராகுல், கோயங்காpt web

ஆனால் நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றியின் போது ‘இது என்னுடைய மண்’ என்பது போலான செலப்ரேஷனை செய்த ராகுல், தற்போது லக்னோ அணிக்கு எதிராக ‘என் பெயரை மறந்துவிடாதீர்கள்’ என்பது போலான செலப்ரேஷனை செய்துள்ளார்.

தொடர்ச்சியாக காயம் காரணமாக கேஎல் ராகுலின் இடம் இந்திய அணியிலும் வாழ்வா சாவாகவே இருந்துள்ளது. அது அப்படியே ஐபிஎல்லிலும் பிரதிபலித்த நிலையில், தன்னுடைய திறமை என்ன என்பதை வெளிக்காட்டும் விதமாக இவற்றையெல்லாம் செய்கிறாரா என்பது புரியவில்லை. எப்படி இருப்பினும் கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் நல்ல ஃபார்மிற்கு திரும்புவது இந்திய அணிக்கு பலம்சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com