அவசரமாக நாடு திரும்பிய லிட்டன் தாஸ்... கொல்கத்தா அணிக்கு பின்னடைவா?

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பங்குபெற்று விளையாடி வரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், இன்று நாடு திரும்பியுள்ளார்.
litton das, kkr team
litton das, kkr teamkkr twitter page

10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகள் முடிந்துள்ளன. இதையடுத்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச அணியின் விக்கெட் கீப்பரான லிட்டன் தாஸ், அவரது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் அவசர சூழலால் இன்று தாயகம் திரும்பினார். இதை, கொல்கத்தா அணி உறுதி செய்துள்ளது.

28 வயதான, லிட்டன் தாஸ் எஞ்சியிருக்கும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட லிட்டன் தாஸ், இந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். தற்போது, அவர் அணியில் இல்லாதது கொல்கத்தாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த தொடரில் கொல்கத்தா அணி, 8 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றிபெற்று 7வது இடத்தில் உள்ளது. நாளை (ஏப்ரல் 30) குஜராத்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், லிட்டன் தாஸ் இன்று அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com