’உங்க ஆட்டோகிராஃப் கிடைக்குமா? ’ - மைக் ஹஸ்ஸி உடனான ஃபேன் பாய் தருணத்தை பகிர்ந்து கொண்ட கலீல்!
2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
நூர் அகமது 9 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும், கலீல் அகமது 6 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
சிஎஸ்கே பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கால் கலீல் அகமது மற்றும் நூர் அகமது இருவரின் அபாரமான பந்துவீச்சுக்கு மதிப்பு கிடைக்காமல் போய்வருகிறது.
புதிய பந்தில் தொடர்ந்து மிரட்டிவரும் கலீல் அகமது சிஎஸ்கே அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்துவருகிறார். இந்த சூழலில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியுடனான அன்றும் இன்றும் என ஃபேன் பாய் தருணத்தை பகிர்ந்துள்ளார் கலீல் அகமது.
ஃபேன் பாய் தருணத்தை பகிர்ந்து கொண்ட கலீல்..
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கலீல் அகமது, சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி உடனான அன்றும் இன்றும் தருணத்தை பகிர்ந்துள்ளார்.
அவருடைய பதிவில், ’உங்களிடம் ஒரு ஆட்டோகிராஃப் கிடைக்குமா’ என்பதிலிருந்து ‘என் ஸ்விங் பந்துக்கு உதவ முடியுமா’ வரை என மைக் ஹஸ்ஸி உடனான பழைய புகைப்படம் மற்றும் புதிய புகைப்படம் இரண்டையும் பகிர்ந்துள்ளார்.
புதிய பந்தில் இரண்டு பக்கம் பந்தை திருப்பக்கூடியவரும், டெத் ஓவர்களில் யார்க்கர் மற்றும் வேரியேசன்களை வைத்திருக்கும் இடது கை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அகமதை 2025 ஐபிஎல் தொடரில் 4.8 கோடி ரூபாய்க்கு அணியில் தக்கவைத்துள்ளது.