ஐபிஎல் விதிமீறல் ஜாஸ் பட்லரை தண்டித்த அம்பயர்கள்..!

பட்லர் ரன் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிய போது கோபத்தில் பவுண்டரி எல்லைக்கோட்டை பேட்டால் அடித்தார்.
Jos Butler
Jos ButlerPT Desk

போட்டியின் விதிகளை மீறியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜாஸ் பட்லருக்கு ஆட்ட சம்பளத்தில் இருந்து 10 சதவிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Jos Buttler
Jos ButtlerPTI

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டியில் ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஜாஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பட்லர் ரன் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிய போது கோபத்தில் பவுண்டரி எல்லைக்கோட்டை பேட்டால் அடித்தார். இதன் காரணமாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஜாஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com