CSK Vs RCB|பெங்களூரு மைதானம்... கனமழையால் கைவிடப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இத்தனையா?

ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை மழையால் கைவிடப்பட்ட போட்டிகள் குறித்த ஒரு தகவலை இங்கு பார்க்கலாம்.
சின்னசாமி மைதானம்
சின்னசாமி மைதானம்ட்விட்டர்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளைவிட, இன்று பெங்களூருவில் நடைபெற இருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பற்றிய செய்திகளே இணையதளங்களை திக்குமுக்காடச் செய்கின்றன. அதற்குக் காரணம், அங்கு பெய்துவரும் மழைதான். இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை மழையால் கைவிடப்பட்ட போட்டிகள் குறித்த ஒரு தகவலை இங்கு பார்க்கலாம்.

2011-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் மழை அதிகரித்ததால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: CSK Vs RCB| ’சிஎஸ்கே தோற்பது உறுதி..’ மே 18-ல் எப்போதும் தோற்காத ஆர்சிபி.. குஷியில் கோலி ரசிகர்கள்!

சின்னசாமி மைதானம்
CSK VS RCB| போட்டியைக் காண டிக்கெட் புக்கிங்.. ரூ.3 லட்சத்தை இழந்த இளைஞர்.. போலீஸ் விசாரணை!

அதேபோல் 2015-ஆம் ஆண்டு ஆர்சிபி - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் திடீரென பெய்த மழை காரணமாக ஆர்சிபி பேட்டிங் செய்யாமலேயே ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் 2015-ஆம் ஆண்டு ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் பெய்த மழையால் ராஜஸ்தான் அணியால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

அடுத்து, 2017-ஆம் ஆண்டு ஆர்சிபி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் 2019ஆம் ஆண்டு ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக 5 ஓவர்கள் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 63 ரன்கள் இலக்கை விரட்டியபோது, மீண்டும் 4வது ஓவரில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் மழையால் 6 போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருப்பினும், 2019ஆம் ஆண்டுக்குப் பின் மழையால் போட்டிகள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: CSK Vs RCB| மழை பெய்தால் இதுதான் இலக்கு.. வாழ்வா, வீழ்ச்சியா கட்டத்தில் CSKவை வீழ்த்துமா RCB?

சின்னசாமி மைதானம்
CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com