சென்னை சூப்பர் கிங்ஸ்-  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முகநூல்

சென்னை ரசிகர்களை Silent ஆக்கிய Stoinis! தோனியை கலாய்த்த LSG! சோகத்தில் முடிந்த Ruturaj-ன் 3 சதங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்தே ஒரு வரலாற்று தோல்விக்கு தள்ளியிருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

எப்போதும் இல்லாத வகையில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மூன்று அணிகளும் நல்ல வீரர்களை வைத்திருந்தும் சரியான 11 வீரர்கள் கொண்ட அணியை கட்டமைக்க முடியாமல் தடுமாறிவருகிறது.

முதல் கேப்டனாக சதமடித்து அசத்திய ருதுராஜ்..

சென்னையில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சிறப்பான தாக்குதலை வெளிப்படுத்திய லக்னோ பவுலர்கள், அஜிங்கியா ரஹானேவை 1 ரன்னிலும், டேரில் மிட்செலை 11 ரன்னிலும் வெளியேற்றி விரைவாகவே விக்கெட்டுகளை எடுத்துவந்து சென்னை அணியை பேக்ஃபுட்டில் போட்டனர்.

ஆனால் அதற்கு பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபேவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் போட்ட சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனியாளாக அணியை தாங்கி எடுத்துவந்தார். ஒருபுறம் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷிவம் துபே 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 27 பந்தில் 66 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார். இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் ருதுராஜ் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வாணவேடிக்கை காட்டி 108 ரன்கள் அடிக்க, 210 என்ற நல்ல டோட்டலை எட்டியது சிஎஸ்கே அணி. கடைசியாக களத்திற்கு வந்த தோனி இறுதி பந்தில் பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்-  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
‘11பேர் ஆடுவதுதான் கிரிக்கெட்; IMPACT PLAYER விதியை நீக்குங்கள்’ - ரோகித் முதல் முகேஷ் வரை கோரிக்கை!

60 பந்துகளில் 108 ரன்கள் குவித்த ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் வரலாற்றில் சதமடிக்கும் 8வது ஐபிஎல் கேப்டனாகவும், 16 வருடத்தில் சதமடிக்கும் முதல் சிஎஸ்கே கேப்டனாகவும் மாறி சாதனை படைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்-  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
16 வருடங்களுக்கு பிறகு முதல் சிஎஸ்கே கேப்டன்.. தோனியின் சாதனையை உடைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

தனியாளாக சம்பவம் செய்த ஸ்டொய்னிஸ்!

211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு எதிராக, முதல் ஓவரிலெயே டி-காக்கை போல்டாக்கி அனுப்பிய தீபக் சாஹர் அதிர்ச்சி கொடுத்தார். உடன் 16 ரன்னில் கேஎல் ராகுலும் வெளியேற, 33 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி தடுமாறியது. ஆனால் என்னதான் இரண்டு விக்கெட்டுகளை விரைவாகவே இழந்தாலும், 3வது வீரராக களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் மரண பேட்டிங்கை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக விளையாடினார்.

படிக்கல்லுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப், நிக்கோலஸ் பூரனுடன் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் தீபக் ஹூடாவுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் என கலக்கிப்போட்ட ஸ்டொய்னிஸ், தனியொரு வீரனாக சிஎஸ்கே பவுலர்களை துவம்சம் செய்தார்.

கடைசிவரை களத்தில் நின்று 13 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வாணவேடிக்கை காட்டிய ஸ்டொய்னிஸ், சென்னை ரசிகர்களை சத்தமே எழுப்ப விடாமல் சைலண்ட் செய்தார். அதுமட்டுமில்லாமல் 63 பந்தில் 123 ரன்களை குவித்த மிரட்டிய ஸ்டொய்னிஸ், லக்னோ அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்ச ரன்சேஸிங்கை பதிவுசெய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சிஎஸ்கே அணியை டாப் 4 பட்டியலில் இருந்து வெளியேற்றி 4வது இடத்திற்கு முன்னேறியது.

சென்னை அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்!

சென்னை அணியின் தோல்வியை பொறுத்தவரை தீபக் சாஹர் பவுண்டரி லைனில் செய்த மிக மோசமான ஃபீல்டிங்கால் 14 ரன்களை விட்டுகொடுத்தது பெரிய காரணமாக அமைந்தது. அதேநேரத்தில் யார்க்கர்களை அதிகமாக வீசாதது சென்னை பவுலர்களை கடினமான நிலைக்கு தள்ளியது, அதற்கேற்றார் போல் மைதானத்தில் இருந்த அதிகப்படியான பனிப்பொழிவு சென்னை அணிக்கு பெரிய பாதகமாக அமைந்தது.

எப்போதும் அணியின் 11 வீரர்களை மாற்றாத சென்னை அணி நிர்வாகம், ருதுராஜ் தலைமையில் அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் இன்னும் சரியான 11 வீரர்கள் மற்றும் பேட்டிங் ஆர்டர்களை உறுதிசெய்யமுடியாமல் தடுமாறி வருகின்றனர். உடன் ருதுராஜின் அனுபவமின்மை கேப்டன்சியில் வெளிப்படுவது கூடுதல் பாதகமாக அமைந்துவருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்-  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
16 வருடங்களுக்கு பிறகு முதல் சிஎஸ்கே கேப்டன்.. தோனியின் சாதனையை உடைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

ருதுராஜ் சதமடித்த 2 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்திய அணிக்காக அவர் சதமடித்த டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தது.

தோனியை கலாய்த்த LSG!

சென்னை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு “MS FINISHES OFF IN STYLE IN CHENNAI” என பதிவிட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, மார்கஸ் ஸ்டொய்னிஸ் பெயரை MS என பதிவிட்டு எம்எஸ் தோனியின் டிரேட் மார்க் டயலாக்கை வைத்து கலாய்த்து போஸ்ட் செய்தது.

மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் நிரம்பியிருந்த போது நடுவில் ஒரேயொரு LSG ரசிகர் ஆரவாரம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போறபோக்க பார்த்தா ஐபிஎல்லின் டாப் 3 அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி 3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது என்ற சூழல் முதல்முறையாக உருவாகுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 8 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்றிருக்கும் சிஎஸ்கே அணி, மீதமிருக்கும் 6 போட்டிகளில் SRH மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com