லக்னோ வெற்றியால் அதிகரித்த நெருக்கடி.. இதெல்லாம் நடந்தாதான் RCBக்கு பிளேஆஃப் வாய்ப்பு!

ஐபிஎல் நடப்பு சீசனில் இன்று 60வது லீக் போட்டியில் ராஜஸ்தானைச் சந்திக்க இருக்கும் பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
rcb
rcbrcb twitter page

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகளில் ஒருசில அணிகளைத் தவிர, மற்ற அணிகள் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்குப் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் சுற்று எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.

ஐபிஎல் சீசனில் தன்னகத்தே பல சாதனைகளை வைத்திருக்கும் பெங்களூரு அணி, இதுவரை ஒருமுறைகூட கோப்பையை உச்சி முகர்ந்ததில்லை. இந்த முறையாவது பெங்களூரு அணி, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் போராடி வருகிறது.

அதன்படி, அவ்வணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கிறது. என்றாலும் அவ்வணி பிளே ஆப்க்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றே கூறப்படுகிறது. ஆம், அந்த அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் உள்ளன. அது, தனது கடைசி மூன்று லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த மூன்று அணிகளையும் பெங்களூரு வீழ்த்தும்பட்சத்தில் அதில் பெற்ற வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளைப் பெற முடியும். இதன்மூலம் அந்த அணி மொத்தம் 16 புள்ளிகளைப் பெறும்.

இது, பிளே ஆஃப்க்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றிருந்தாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே பல அணிகள் போட்டி போடுவதால் பெங்களூரு அணிக்கு இது நெருக்கடியையே தரும். ஆகையால், அந்த அணி தன்னுடைய கடைசி 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன், NRRஐ அதிகரிக்கும் அளவுக்கு நல்ல ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதையும் உறுதி செய்ய வேண்டும். என்றாலும், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளின் வெற்றி தோல்வி புள்ளிப் பட்டியலைப் பொறுத்தே பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும் எனக் கூறப்படுகிறது. ஆக, பெங்களூரு அணி அடுத்து வரும் 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெறுவதுடன் காத்திருப்பு சோதனைக்கும் உள்ளாகி இருக்கிறது. அதேநேரத்தில் இந்த 3 போட்டிகளில் பெங்களூரு அணி ஒன்றில் தோற்றால்கூட, அவ்வணியின் பிளே ஆஃப் கனவு சிதைந்துவிடும்.

அந்த வகையில், இன்றைய 60வது லீக் போட்டியில் பெங்களூரு அணி, ஜெய்ப்பூரில் ராஜஸ்தானைச் சந்திக்க இருக்கிறது. இந்தப் போட்டியின் வெற்றி, தோல்வியே பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்றை நிர்ணயித்துவிடும் என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com