IND vs ZIMpt desk
T20
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டிகள்: 4 - 1 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியா
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான டி20 தொடரின் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, ஹராரே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் எடுத்தார்.
IND vs ZIMpt desk
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே, 18.3 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 4க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.