\
sanju samson
sanju samsonbcci

INDvsWI| சதத்தை தவறவிட்ட சஞ்சு சாம்சன்.. 249 ரன்கள் குவித்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 82 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன்.
Published on: 
Summary

ராஞ்சியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்தியா 249 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸுக்கு சவால் விட்டது. சஞ்சு சாம்சன் 82 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டார், மற்ற வீரர்கள் அதிரடியாக ஆடி அணியின் மொத்தத்தை உயர்த்தினர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக சதமடித்து இந்தியாவை வெற்றிபெறவைத்தார்.

சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன்
சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன்bcci

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 249 ரன்களை குவித்துள்ளது.

தொடக்க வீரராக களமிறங்கிய 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோது சிக்சர் அடிக்கும் முயற்சியில் விக்கெட்டை பறிகொடுத்தார் சஞ்சு. அதற்குபிறகு வந்த இஷான் கிஷன் 22 பந்தில் 43, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 பந்தில் 40, திலக் வர்மா 18 பந்தில் 44 ரன்கள் என மிரட்டிவிட 20 ஓவரில் 249 ரன்கள் என்ற இமாலய டோட்டலை குவித்தது இந்தியா.

sanju samson
“இந்திய அணியின் பவுலிங் கிங்காக..” புவனேஷ்வர் குமாரை புகழ்ந்த அஸ்வின்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com