மகளிர் டி20 உலக கோப்பை: எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்த ஐ.சி.சி திட்டம்

மகளிர் T20 உலக கோப்பையை எங்கு நடத்துவது என்பது குறித்து விரைவில் ஆலோசனை கூட்டத்தை நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.
icc
iccpt desk
Published on

ஐ.சி.சி மகளிர் டி20 தொடர் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது இதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.சி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

India Women's team
India Women's team

வங்கதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் Nazmul Hasna நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். வங்கதேச கிரிக்கெட் சங்கத்தில் உள்ள பெரும்பாலன நபர்கள் அவாமி லீக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

icc
பாரிஸ் ஒலிம்பிக்|இந்திய ஹாக்கி அணியின் கனவு நாயகன்; கோல்போஸ்டில் இரும்புக்கோட்டையாய் நின்ற ஶ்ரீஜேஷ்!

துபாய், இலங்கை அல்லது இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்த வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை தொடர் தொடங்க 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் விற்பனை என அனைத்தும் தொடங்கப்பட வேண்டும் என்பதால் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com