‘இந்திய டி20 அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான்’ - ஹர்பஜன் சொல்லும் அந்த வீரர் யார்?

இந்திய டி20 அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளங்குவார் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.
Harbhajan Singh
Harbhajan SinghFile Image

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் மற்றும் இந்திய டி20 அணி இனி எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில் இந்திய டி20 அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளங்குவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங், ''நாம் பேட்ஸ்மேன்களைப் பற்றி பேசினால், சுப்மன் கில்லுக்கு அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார். யஷஸ்வி இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி மிகவும் ஈர்க்கக்கூடிய வீரராக இருப்பார் என்று உறுதியாக கூறுகிறேன்.

அவர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார். சுப்மன் கில்லும் அணியில் இருப்பார், ஒருவேளை அவர் கேப்டனாகவும் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் அணியில் இடம்பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இந்திய அணியின் எதிர்காலத்திற்காக நான் ஒரு அணியை உருவாக்குகிறேன் என வைத்துக்கோள்வோம்... அப்போது அணியில் இருப்பவர்கள் அனைவரும் நம்பமுடியாத திறமைசாலிகளாக இருப்பர். அந்த அணியில்

Shubhman Gill &  Yashasvi
Shubhman Gill & YashasviFile Image

... இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்பட்சத்தில், தற்போதைய ஃபார்ம் படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் சிறந்த தேர்வு. கடந்த ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தபோது, இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. எனவே ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஷுப்மான் கில், திலக் வர்மா, நிதிஷ் ராணா ஆகியோரைக் கொண்ட ஒரு புதிய அணி அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருக்க வேண்டும். யஷஸ்வி மற்றும் ஷுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க வேண்டும்'' என்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com