GTvCSK இரு அணியிலும் களமிறக்கப்பட்ட முக்கிய வீரர்கள் யார் யார்? IPL 2023

16வது ஐபிஎல் சீசனின் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இரண்டும் முக்கிய வீரர்களைக் களமிறக்கி உள்ளது.
IPL கேப்டன்கள் ஹர்திக் பாண்டியா, தோனி
IPL கேப்டன்கள் ஹர்திக் பாண்டியா, தோனிtwitter

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்லின் 16வது சீசன், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரில், இன்று 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகிறது.

முன்னதாக டாஸ் ஜெயித்த குஜராத் அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை அணியில் தோனி (கேப்டன்), டெவன் கான்வே, ருத்ராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், ரவீந்திரன் ஹேங்கர்கர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விருத்திமான் ஷா, சுப்மன் கில், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், முகம்மது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தற்போது வரை சென்னை அணி, 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com