Gongadi Trisha
Gongadi TrishaPT

யு19 மகளிர் டி20 உலகக்கோப்பை | 2011 யுவராஜ் சிங்கை நினைவுபடுத்திய திரிஷா... 5 தரமான சாதனைகள்!

இந்திய ஆல்ரவுண்டர் வீராங்கனை கொங்கடி திரிஷா, 309 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி யு19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகி விருதை தட்டிச்சென்றார். இந்த ஆட்டம் 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கின் ஆல்ரவுண்ட் திறமையை நினைவு படுத்தியது.
Published on

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.

ஒரு உலகக்கோப்பைக்காக 16 நாடுகள் போட்டிப்போட்ட நிலையில், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

india won U19 womens t20 world cup
india won U19 womens t20 world cup

மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 82 ரன்களுக்கு சுருட்டிய இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது.

2022-2023ஆம் ஆண்டுக்கான யு19 டி20 உலகக்கோப்பையை வென்றிருந்த இந்திய அணி, தொடர்ச்சியாக 2024-2025 உலகக்கோப்பையையும் வென்று சாதனை படைத்துள்ளது.

தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இந்தியாவிற்காக சிறந்து விளங்கிய் இந்திய வீராங்கனை கொங்கடி திரிஷா தொடர் நாயகி விருதை தட்டிச்சென்றார்.

Gongadi Trisha
'மீண்டும் ஃபைனலில் தோற்ற தென்னாப்ரிக்கா..' 2வது முறையாக யு19 டி20 உலகக்கோப்பை வென்ற IND மகளிர் அணி!

யுவராஜ் சிங்கை கண்முன் காட்டிய வீராங்கனை!

2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எப்படி இந்திய வீரர் யுவராஜ் சிங் ஒரு ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி பேட்டிங்கில் 362 ரன்கள், பவுலிங்கில் 15 விக்கெட்டுகள் என மிரட்டி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தாரோ, அப்படியே 19 வயது வீராங்கனையான கொங்கடி திரிஷா யு19 டி20 உலகக்கோப்பையில் கலக்கியுள்ளார்.

7 போட்டிகளில் விளையாடி யு19 டி20 உலகக்கோப்பையில் சதமடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்த திரிஷா கொங்கடி, பேட்டிங்கில் 309 ரன்கள் அடித்தும், பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தொடர் நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார்.

திரிஷா படைத்த 5 தரமான சாதனைகள்:

1. தொடர் நாயகி விருது – 309 ரன்கள், 7 விக்கெட்டுகள்

2. ஆட்ட நாயகி – இறுதிப்போட்டியில் 44 ரன்கள், 3 விக்கெட்டுகள்

3. யு19 டி20 உலகக்கோப்பையின் ஒரு சீசனில் அதிகபட்ச ரன்கள் – 309

4. யு19 டி20 உலகக்கோப்பையில் சதமடித்த ஒரே உலக வீராங்கனை

5. யு19 டி20 உலகக்கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - 110

Gongadi Trisha
IND செய்தது நியாயமே இல்லை.. பின்நாளில் நமக்கே இது நடந்தால்? - ஹர்சித் ரானா விவகாரம் குறித்து அஸ்வின்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com