சிஎஸ்கே
சிஎஸ்கே web

IPL 2025 | சிஎஸ்கே அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் தமிழக வீரர் நியமனம்!

2025 ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on

2025 ஐபிஎல் தொடரானது சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு வரும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

csk
csk

சிஎஸ்கே அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை மார்ச் 23-ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.

இந்த சூழலில் மகேந்திர சிங் தோனியின் கம்பேக்கை எதிர்நோக்கி சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், புதிய பயிற்சியாளரை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிஎஸ்கே
29 வருடத்திற்கு பின் இடம்பெற்ற ஐசிசி தொடர்.. முதல் அணியாக வெளியேறும் பாகிஸ்தான்? வாய்ப்பு என்ன?

புதிய உதவி பந்துவீச்சு பயிற்சியாளர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங்கும், பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸியும், பவுலிங் ஆலோசகராக எரிக் சைமன்ஸும் நீடிக்கும் நிலையில், புதிய உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரும் தமிழக வீரருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச லெவல், ஐபிஎல் லெவல் என பல்வேறு பயிற்சி அனுபவத்தோடு சிஎஸ்கே அணியில் இணையும் ஸ்ரீராம், டிவைன் பிராவொவின் இடத்தை நிரப்ப உள்ளார். பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதரன் ஸ்ரீராம் அனுபவங்கள்:

* 2016 முதல் 2022 வரை ஆஸ்திரேலியாவின் உதவிப் பயிற்சியாளராக இருந்தார்.

* ஆகஸ்ட் 2022-ல், ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்காக வங்கதேசத்தின் டி20 ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

* செப்டம்பர் 2023-ல், ஐபிஎல் 2024 க்கான உதவி பயிற்சியாளராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் (LSG) செயல்பட்டார்.

* 2023 ODI உலகக் கோப்பைக்கு முன்பு வங்கதேசத்திற்கு தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தார்.

* ஐபிஎல்லில் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சிஎஸ்கே
சாம்பியன்ஸ் டிராபி| 51வது ODI சதமடித்தார் கிங் கோலி.. பாகிஸ்தானை வென்ற இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com