”தொடர் முழுவதும் காயங்கள் ஏற்பட்டால் கூட வலிமையான அணி இந்தியா தான்”! முன்னாள் ENG கேப்டன் நம்பிக்கை!

டி20 உலகக்கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணி என்றால் அது இந்தியா தான். அவர்கள் பேப்பரில் வைத்திருக்கும் தரத்தை களத்தில் வெளிப்படுத்தினால், யாரை வேண்டுமானாலும் வெல்ல முடியும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி கோலாகலமாக தொடங்கப்படவிருக்கும் நிலையில், கோப்பையை வெல்வதற்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஐந்து-ஐந்து அணிகளாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவிருக்கின்றன.

குரூப் A-ல்,

இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் B-ல்,

நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

குரூப் C-ல்,

சொந்த மண்ணில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் ஜெனிவா முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் D-ல்,

தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாள் முதலிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி
”தட்டிக்கொடுக்க சொன்ன தோனி” To ”இஷாந்த்-கோலி இடையான ஸ்பெஷல் நட்பு” - 2024 IPL-ன் 5 ’வாவ்’ மொமண்ட்ஸ்!

வலிமையான அணி இந்தியா தான்!

டி20 வடிவம் என்பதால் சிறிய அணி, பெரிய அணி என்ற வித்தியாசம் இல்லாமல் பல அப்செட்டுகள் உலகக்கோப்பையில் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. கடந்த டி20 உலகக்கோப்பையில் கூட சிறிய அணிகள், வலுவான அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணி ஐபிஎல் தொடரிலிருந்து நேரடியாக சென்றிருப்பது டி20 வடிவத்திற்கு சாதகமான சூழல் என்றாலும், அங்கிருக்கும் ஆடுகளத்தின் தன்மையை சமாளிக்கும் வகையிலான ஒரு அணியுடனே பயணம் செய்துள்ளது.

இந்திய அணி, ரோகித் சர்மா
இந்திய அணி, ரோகித் சர்மாட்விட்டர்

இதனால் இந்திய அணி குறித்து பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், பேப்பரில் அனைத்து கட்டங்களையும் டிக் செய்திருக்கும் ஒரு அணி இந்தியா தான் என்று கூறினார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில் பேசியிருக்கும் மோர்கன், “என்னைப் பொறுத்தவரை, தொடர் முழுவதும் காயங்கள் முதலிய பிரச்னைகள் இருந்தால் கூட வலுவான அணி என்றால் அது சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியா தான். இந்த நேரத்தில் இந்தியா கொண்டிருக்கும் வலிமை மற்றும் ஆழம் முற்றிலும் நம்பமுடியாதது. நாம் அவர்களின் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாத வீரர்களைப் பற்றி பேசுகிறோம், ஏனென்றால் அவர்கள் அந்தளவு தரமான வீரர்களை வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும் இந்தியாவால் எந்த அணியை கூட வீழ்த்த முடியும் என்று கூறிய அவர், "அவர்கள்தான் என்னுடைய கோப்பையை வெல்லக்கூடிய விருப்பமான அணியாக இருக்கிறார்கள். அவர்கள் பேப்பரில் சிறந்த வீரர்களை கொண்டிருக்கிறார்கள், காகிதத்தில் இருக்கும் தரத்தை அவர்கள் களத்தில் வெளிப்படுத்தினால், எந்த அணியை வேண்டுமானாலும் அவர்களால் வீழ்த்த முடியும்” என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி
’Toss போடுவதில் ஏமாற்றிய MI?’ முதல் ‘கைக்கொடுக்காமல் சென்ற தோனி’ வரை! 2024 IPL-ன் டாப் 5 சர்ச்சைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com