\
 ஐபிஎல் போட்டி
ஐபிஎல் போட்டி முகநூல்

CSK vs GT | இன்று நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் லீக் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண ஆயிரக்கணக்கனோர் வந்து செல்ல உள்ளதால் மெட்ரோ ரயில் நிர்வாகம் இரவு 11 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

CSK vs GT
CSK vs GTpt web

மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைனில் பயணச்சீட்டை பெறலாம் என்றும், மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐபிஎல் போட்டி
’இன்று RCB தோற்றால் நாளை CSK ஜெர்ஸி அணிவேன்’ - ஏபி டிவில்லியர்ஸ் சவால்

இரவு 11 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com