Dream 11 Winner
Dream 11 WinnerPTI

ட்ரீம் லெவனால் ரூ.1.5 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டகார ஆட்டோ டிரைவர்

மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சஹாபுதீன் ஆன்லைன் கேமிங் செயலியான Dream 11 போட்டியில் வெற்றி பெற்று, ஒன்றரை கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
Published on

கடந்த சனிக்கிழமை விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடையிலான போட்டியை ஒட்டி சஹாபுதீன் 49 ரூபாய் கட்டி, ட்ரீம் லெவன் கிரிக்கெட் போட்டியில், வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இப்போட்டியில் சஹாபுதீன், ட்ரீம் டீம் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.1.5 கோடி கிடைக்கும்.

ஆட்டோ டிரைவரான சஹாபுதீன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ட்ரீம் லெவன் போட்டியில் பங்கேற்று வருகிறார். ஆனால் முதல் முறையாக இப்போதுதான் அவருக்கு ஒரு பெரிய ஜாக்பாட்டாக இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது. அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து சஹாபுதீன் கூறுகையில், ''எனக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. நான் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசு தொகையைக் கொண்டு, நான் முதலில் ஒரு வீட்டைக் கட்டுவேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com