காயத்தைப் பற்றியெல்லாம் தோனி யோசிப்பதேயில்லை : எரிக் சிம்மன்ஸ்

அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில் மட்டும் தான் தோனி முழுக் கவனத்தையும் கொண்டிருக்கிறார்
Dhoni
DhoniKunal Patil

" காயத்தைப் பற்றியெல்லாம் தோனி யோசிப்பதே இல்லை. நாங்கள் தான் கவலைப்படுகிறோம். இந்த ரன் தேவையென தோனி முடிவு செய்துவிட்டால், அதை சாதித்துவிட்டுத்தான் அடுத்தது பற்றி யோசிக்கிறார்" என சென்னை சூப்பர் கிங்ஸின் பவுலிங் கன்சல்டண்ட் எரிக் சிம்மன்ஸ் பேசியிருக்கிறார்.

Dhoni
வெற்றிக்குக் காரணம் எங்களின் 'இளம்' விக்கெட்கீப்பர் : CSK கேப்டன் புகழாராம்..!

நேற்று நடந்த சென்னை வெர்சஸ் மும்பை போட்டியில் யாராலும், சென்னை இன்னிங்ஸின் கடைசி நான்கு பந்துகளை மறக்க முடியாது. தேவையான ரன்கள் வந்து சேரவில்லையே என சென்னை ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக இருக்க, உள்ளே நுழைந்தார் தல தோனி. லாங் ஆஃப் திசையில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸிற்கே வான்கடே ஆரப்பரித்தது. அடுத்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ். அடுத்தடுத்து சிக்ஸ் அடிப்பார் தோனி என யாருமே எதிர்பார்க்கவில்லை. 42 வயதில் விண்டேஜ் தோனியை பார்க்க முடிந்தது. என்ன செய்வதென தெரியாமல் குழம்பிப்போன மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபுல் டாஸ் போட, அதை டீப் ஸ்குயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாசி ஹேட்ரிக் அடித்தார். அடுத்த பந்தில் அதிவிரைவாக ஓடி, 2 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 206 என உயர்த்தினார். தோனி அடித்த இந்த 20 ரன்கள் தான் கடைசியில் வெற்றிக்கான இடைவெளியாக இருந்தது.

அதே சமயம், தோனிக்கு விளையாடும் போது சில தொந்தரவு இருந்ததாக தற்போது பேசியிருக்கிறார் சென்னை அணியின் பவுலிங் கன்சல்டண்ட் எரிக் சிம்மன்ஸ். " எங்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கினார்கள். ஆனால், ஒரே ஓவரில் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார் தோனி. அவர் ஒவ்வொருமுறையும் எங்களை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். களத்திற்கு சென்றவுடன் அப்படி எடுத்த எடுப்பில் சிக்ஸ் அடித்து அதை அப்படியே தொடர்வது எல்லாம் லேசுபட்ட காரியமல்ல. நிச்சயமாக அவருக்கு சில தொந்தரவுகள் இருந்திருக்கும். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதே இல்லை. அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில் மட்டும் தான் முழுக் கவனத்தையும் கொண்டிருக்கிறார். நாங்கள் எல்லோரும் தான் அவரின் உடல்நிலை குறித்து யோசித்திக்கொண்டிருக்கிறோம். நான் சந்தித்ததிலேயே மிகவும் அழுத்தமான மனிதர் தோனி தான். காயம் இருக்கிறதோ இல்லையோ, எவ்வளவு சீரிஸாக இருக்கிறதோ, அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் அடுத்து அடுத்து என சென்றுகொண்டிருக்கிறார்" என தோனியைப் பற்றி எரிக் சிம்மன்ஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com