பதிரானாவிற்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட்.. பயிற்சியில் மாஸ் காட்டிய தோனி! வீடியோ
18-வது ஐபிஎல் சீசனானது மார்ச் 22 முதல் தொடங்கி மே 25-ம் தேதிவரை நடத்தப்படவிருக்கிறது.
கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் அடுத்த கோப்பைக்காகவும், கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முதல் கோப்பைக்காகவும் களமிறங்க உள்ளன.
2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
பதிரானாவுக்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட்..
அன்கேப்டு பிளேயர் விதிமுறை மூலம் மூத்தவீரரான மகேந்திர சிங் தோனி 4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் 2025 ஐபிஎல் தொடரிலும் எம்எஸ் தோனியின் ஸ்கிரீன் பகிர்வை பார்ப்பதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், பயிற்சி அமர்வில் இன்று பதிரானாவை எதிர்கொண்ட மகேந்திர சிங் தோனி, தன்னுடைய சிறந்த ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பதிரானாவிற்கு எதிராக சிக்சரை பறக்கவிட்டார். அந்த வீடியோவை சிஎஸ்கே தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
2025 ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணி நல்ல பேலன்ஸான அணியாக தெரிகிறது. அவர்களிடம் டாப் ஆர்டரில் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே என்ற இரண்டு சிறந்த இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதேபோல மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா என இடது கை ஆல்ரவுண்டர்களும் நிரம்பிவழிகின்றனர். அத்துடன் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங்கும் இடம்பிடித்துள்ளனர். அவர்களை கடந்து கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், மகேந்திர சிங் தோனி, பதிரானா, அஸ்வின், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷ்ரேயாஸ் கோபால், நூர் அகமது, நாகர்கோட்டி முதலிய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
உத்தேச சிஎஸ்கே 11: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ஜடேஜா, சாம் கரன், எம்எஸ் தோனி (விக் கீப்பர்), அஸ்வின், கலீல் அகமது, பதிரானா
இம்பேக்ட் சப்: குர்ஜப்னீத் சிங், நூர் அகமது