dhoni
dhoniweb

”என்னைவிட அணியே முக்கியம்; ஒருவேளை நான் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல்..” - தோனி ஓபன் டாக்!

தனிப்பட்ட வீரர் சாதனைகளை படைப்பதை விட, அணி வெல்வதே முக்கியமான விசயம் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் 3 ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் கேப்டனாக சம்பவம் செய்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லில் 5 கோப்பைகளை வென்று வெற்றிக்கேப்டனாக வலம்வருகிறார். அதுமட்டுமில்லாமல் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணியை கேப்டனாக வழிநடத்திய தோனி 5 கோப்பைகளை வென்றதோடு, 10 முறை இறுதிப்போட்டிக்கும் அணியை வழிநடத்தியுள்ளார்.

தோனி,
தோனி,IPL Page

இப்படி ஒரு தலைசிறந்த கேப்டனை கொண்டிருந்த சிஎஸ்கே அணி, தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறிவருகிறது.

2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்று மோசமாக செயல்பட்டுவரும் நிலையில், பெரும்பாலானோர் தோனியை விமர்சித்துவருகின்றனர்.

இந்த சூழலில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் தோனி, ஒரு அணிக்கு என்ன தேவை என்பது குறித்து பேசியுள்ளார்.

dhoni
300 டார்கெட்டா? முதல் அணியா கெட்அவுட்டா? 4 போட்டியில் தோற்ற SRH.. 2.O வெர்சனாக மாறிய சிராஜ்!

என்னைவிட அணியே முக்கியம்..

ராஜ் ஷாமானி பாட்காஸ்டில் பேசியிருக்கும் மகேந்திர சிங் தோனி, தன்னுடைய சிறுவயது கால நாட்கள் குறித்தும், எந்த இடத்திலிருந்து இந்தியாவிற்காக விளையாட உத்வேகம் கிடைத்தது என பல்வேறு விசயங்கள் குறித்து பேசியிருந்தார்.

அப்போது ஒரு அணிக்கு தேவை என்ன என்பது குறித்து பேசிய அவர், “உங்கள் அணி முன்னேறினால் தான், உங்களையே திரும்பி பார்ப்பார்கள். நீங்கள் மட்டும் சிறப்பாக விளையாடிவிட்டு உங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், ’ஓ அந்த அணி பிளேயரா’ என அலட்சியமாக பார்ப்பார்கள்.

தனிப்பட்ட வீரரை விட, அணி வெல்லவேண்டும். ஒருவேளை நான் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல், என்னுடைய அணி வெற்றிபெற்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.

தோனி
தோனி

தற்போதுவரை நான் ஐபிஎல் விளையாடிவருகிறேன், நான் விக்கெட் கீப்பர் ரோலில் சிறப்பாக செயல்பட்டுவருகிறேன். ஒருவேளை நான் விக்கெட் கீப்பராக விளையாடவில்லை என்றால், நான் நிச்சயம் அணியில் இருந்திருக்க மாட்டேன். விக்கெட் கீப்பராக என்னுடைய வேலையை சிறப்பாக செய்து, 15 பந்துகளில் 30 ரன்களை என்னால் அடிக்க முடிந்தால், அதுவே அணிக்கு என்னுடைய சிறந்த பங்களிப்பாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.

dhoni
முடிவுக்கு வருகிறதா 21 வருட சாம்ராஜ்யம்..? ஓய்வுபெறுவது குறித்து மௌனம் கலைத்த தோனி! #Video

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com