ஜடேஜாவுடன் சேட்டை செய்த வார்னர்! சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த ஜட்டு! என்ன செய்தார் பாருங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில், ஜடேஜாவிற்கும் டேவிட் வார்னருக்கும் இடையே நடைபெற்ற நகைச்சுவையான சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
ஜடேஜா-வார்னர்
ஜடேஜா-வார்னர்டிவிட்டர்

ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் சுற்றுபோட்டிகளில் இன்னும் 4 போட்டிகளே மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் ஒரு அணி மட்டுமே அரையிறுதிக்கு சிக்கலின்றி முன்னேறியது. மீதமுள்ள 3 பிளே ஆஃப் இடங்களுக்கு சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிய 6 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவிவந்தது.

csk vs dc
csk vs dcTwitter

இந்நிலையில் கட்டாயம் வெற்றியை பெற்றே ஆகவேண்டிய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டு இன்று விளையாடியது சென்னை அணி. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு பெரிய இலக்கிற்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இறுதியில் வந்த துபே மற்றும் ஜடேஜா இருவரும் அதிரடி காட்ட, 224 ரன்கள் என்ற பெரிய இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது சென்னை.

ஜடேஜாவின் வாள் Celebration-ஐ இமிடேட் செய்த வார்னர்!

224 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணியில், விக்கெட்டுகள் விழுந்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் தனியொரு ஆளாக போராடினார். இந்நிலையில் தீபக் சாஹர் வீசிய 5ஆவது ஓவரில் தான், ஒரு நகைச்சுவையான சம்பவம் நடைபெற்றது. அழுத்தமான போட்டி என்றாலும் டேவிட் வார்னர் மற்றும் ஜடேஜா இருவரும் சேர்ந்து களத்தில் ஏற்படுத்திய Fun ஆனது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியை பார்த்த அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

தீபக் சாஹர் வீசிய 5ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு ரிஸ்கியான சிங்கிள் எடுத்துவிட்டு ஓடினார் வார்னர். அதை பவுலர் எண்டில் இருந்து மொயின் அலி பிடித்து ரன் அவுட்டுக்கு அடிக்க, பந்தானது மறுபுறம் இருந்த ரஹானேவின் கையில் சென்று சேர்ந்தது. ஆனால் ரஹானே கையில் பந்து இருந்த போதும், இன்னொரு ரன்னிற்கு செல்வதை போல பாவனை காட்டி சேட்டை செய்தார் வார்னர். இதனால் ரஹானே த்ரோ அடிக்க பந்து ஸ்டம்பை மிஸ் செய்து மறுபுறம் இருந்த ஜடேஜாவிடம் சென்றது.

இப்போது பந்தை பிடித்த ஜடேஜா, ‘எங்கே இப்போ ரன் எடுக்க ஓடுங்க பார்ப்போம்’ என்பதை போல், பந்தை கையில் வைத்துகொண்டு ரன் அவுட் செய்வது போல் பாவனை செய்தார். அதை பார்த்துக்கொண்டிருந்த வார்னர் ஜடேஜாவின் வாள் செலப்ரேசனை அப்படியே இமிடேட் செய்து, Fun செய்தார். அதை பார்த்த ஜட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க, வார்னரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் சிரிப்பொலியை ஏற்படுத்தினர். தற்போது இந்த காணொளி வைரலாகி வருகிறது.

போட்டி முடிவில், சென்னை அணி வெற்றிபெற்று பிளே-ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது! இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com