IPL 2023 Finals | ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’யின் உணர்வுப்பூர்வமான தருணங்கள்...! #CSK #Video

ஐபிஎல் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது சிஎஸ்கே அணி. ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக சிஎஸ்கே அணி கோப்பை வென்றுள்ளது.

16-வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி, கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இறுதிப் போட்டி நடைபெறுவதாக இருந்த நிலையில், அன்று மழை குறுக்கிட்டதால் போட்டி நேற்றைய தினத்துக்கு மாற்றப்பட்டு, நேற்று நடைபெற்றது. அதில் குஜராத் அணி பேட்டிங் செய்து முடிந்தவுடன், சிஎஸ்கே அணி பேட்டிங்கை தொடங்கியது. அப்போது 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.

CSK IPL 2023 Finals
CSK IPL 2023 FinalsKunal Patil

இதையடுத்து நள்ளிரவு 12.10 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கியது. இதில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெற்று 5 வது முறையாக கோப்பையை பெற்றது.

IPL Final
CSKvGT | சாம்பியன்ஸ்... தோனி ஸ்டம்பிங் முதல் ஜடேஜாவின் வின்னிங் ஷாட் வரை... எல்லாமே சென்னை தான்..!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com