CSK v PBKS | இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. வெளுத்து வாங்கிய சாம் கரன்! சாஹலின் 19வது ஓவரில் ட்விஸ்ட்!
கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், பாஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் இன்று விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இளம் வீரர்களான ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே இந்த முறை ஏமாற்றினர். ரஷீத் 11, ஆயுஷ் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். பவர் பிளே மந்தமாக இருந்த சில ரவீந்திர ஜடேஜா சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் 17 ரன்களில் ஆட்டமிழக்க பவர் பிளே முடிவில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.
சரி இன்றைக்கும் 150 ரன்கள் கூட வராது என்றே சிஎஸ்கே ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில் டெவர்ல் பிரேவிஸ் உடன் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்தார் சாம் கரன். தொடக்கத்தில் நிதான விளையாடிய அவர் பின்னர் பவுண்டரிகளை பறக்கவிட்டார். பிரேவிஸ் அவருக்கு சிங்கிள்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருப்பினும் அவர் 3230 பந்துகளில் அரைசதம் விளாசிய சாம் கரன், சூர்யான்ஸ் செட்ஜ் ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் பறக்கவிட்டார். 16 ஓவர்களில் சென்னை அணி 160 ரன்களை தொட்டது.
80 ரன்களை கடந்த சாம் கரன் எப்படி சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், ஜான்சன் வீசிய 18 ஆவது ஓவரில் சிக்ஸர் விளாசினார். ஆனாலும், அதே ஓவரில் கேட்ச் ஆகி 88 ரன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர், வந்த கேப்டன் தோனி முதல் பந்திலே ஒரு பவுண்டரி விளாசினார். தோனி வந்த உடன் 19 ஆவது ஓவரை ஸ்பின்னரான சாஹலுக்கு கொடுத்தார் ஸ்ரேயாஸ்.
முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி மீண்டும் ஒரு சிக்ஸர் விளாச முயன்று எல்லைக்கோட்டில் கேட்ச் ஆகினார். 11 ரன்களில் ஆட்டமிழந்து தோனி ஏமாற்றினார். ஆனால், அந்த ஓவரில் நடந்தது மற்றொரு சோகம். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க, அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த காம்போஜ் மற்றும் நூர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதனால், சாஹலுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது.
அந்த ஓவரில் 4 விக்கெட்டும் சரிந்தது. 20 ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடுத்த துபே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணி 19.2 ஓவர்கள் முடிவில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் சாஹல் 4 விக்கெட் சாய்த்து 200 ரன்கள் எட்ட விடாமல் கட்டுப்படுத்தினார். அர்ஸ்தீப் சிங், ஜான்சன் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.