“சிஎஸ்கே என்பது வார்த்தை இல்லை; அதொரு Emotion” – குட்டி ரசிகையின் க்யூட் பேட்டி!

ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே அணி. பதற்றம், பரபரப்பு என கடைசி பந்து வரை ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த இந்த வெற்றி பற்றி இளம் ரசிகையொருவரின் சந்தோஷ பேட்டி இங்கே!

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணி‌ 5ம் முறையாக கோப்பையை வென்று அதிக முறை ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற அணி என்ற‌ சாதனையை மும்பை அணியுடன் பகிர்ந்து கொண்டது. இப்போட்டியை நேரில் கண்டுகளித்த ஒரு குட்டி ரசிகை, சிஎஸ்கே வின்னிங் மொமண்ட் குறித்து புதிய தலைமுறையில் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசுகையில், “எப்படி சென்னை மக்களுக்கு பிரியாணி என்றால் Craze-ஓ, அதே மாதிரி சிஎஸ்கே என்றாலும் ஒரு Craze. சிஎஸ்கே என்பது வெறும் வார்த்தை இல்லை; அது Emotion. மேட்ச் பார்த்தப்போ, நானே அங்க விளையாடுற மாதிரி இருந்துச்சு. என்னால உட்கார முடியல. நேத்து (நேற்று முன் தினத்தை குறிப்பிட்டு) மேட்ச் நடக்கும்னு வந்திருந்தோம். ஆனா மழையால மேட்ச் நடக்கல. இன்னைக்கு நடக்குது. எனக்கு கையெல்லாம் நடுங்குது. என்னால நம்ப முடியல... அவ்வளவு சந்தோஷம்.

csk fan
csk fanpt desk

தல தோனி அவுட் ஆனதால ஜட்டு விளையாண்டாங்க. அதனாலதான் ஜெயிச்சோம். தல தோனிக்கு எப்பவுமே தெரியும். நம்ம ஜெயிப்போம்னு. ஒரு பிளானிங்லதான் வந்திருக்கார்” என்றார் க்யூட்டாக! இந்த குட்டி ரசிகையில் க்யூட் பேட்டியை, மேலே உள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com