சென்ட்ரல் ரயில் நிலையத்தை அதிரவைத்த விசில் சத்தம் - சிறப்பு ரயிலில் வந்த சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அதிரவைத்த விசில் சத்தத்தால் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிஎஸ்கே ரசிகர்கள் சென்னை வந்தடைந்தனர்.
CSK Fans
CSK Fanspt desk

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 41 ஆவது லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தை கண்டு ரசிக்க வருகை தரும் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக விசில் போடு எக்ஸ்பிரஸ் எனும் சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே உதவியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று நடைபெறும் போட்டியை தென் மாவட்ட ரசிகர்கள் காணும் வகையில் சென்னை அணி நிர்வாகம் போட்டி ஒன்றை நடத்தியது. இதில் வெற்றி பெற்று குலுக்கல் முறையில் தேர்வான 750 பேரை சென்னையில் நடக்கும் சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியை இலவசமாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CSK Fans
CSK Fanspt desk

இதற்கான விசில் போடு எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி அதாவது நேற்று புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அடைந்தது. விசில் போடு எக்ஸ்பிரஸ் வாயிலாக வந்துள்ள இந்த ரசிகர்களுக்கான பயணம், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை சென்னை அணி நிர்வாகம் ஏற்றுள்ளது. அதேபோல, இந்த போட்டிக்கான டிக்கெட் உடன் சென்னை அணியின் டீ ஷர்ட்டும் இவர்களுக்கு வழங்கப்பட்டு போட்டியை காண அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே போட்டியை நேரடியாகக் காண தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தென்னக ரயில்வேயுடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற சிறப்பு ரயிலை சென்னையில் இருந்து புனேவிற்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த ரயில் சென்னையில் இருந்து இன்று இரவு புறப்பட்டு மீண்டும் குமரிக்கு திரும்புகிறது.

இதனிடையே, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com