”நீங்கள் அவரைப் பற்றி எந்த கவலையும் பட வேண்டாம்” - பதிரானா குடும்பத்திடம் தோனி சொன்ன வார்த்தை!

சென்னை அணி வீரர் மதீஷா பதிரானாவின் குடும்பத்தினரைச் அவ்வணியின் கேப்டன் தோனி சந்தித்திருப்பது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியுடன் பதிரானா குடும்பத்தினர்
தோனியுடன் பதிரானா குடும்பத்தினர்twitter page

ஐபிஎல் 16வது சீசன் நிறைவு பெறும் தருணத்துக்கு வந்துள்ளது. ஒருவழியாக லீக் போட்டிகளுக்குப் பிறகு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்கள் பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இதில் முதல் இடத்தில் இருந்த குஜராத்தை வீழ்த்தி, சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. பின்னர் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், லக்னோவை வீழ்த்தி, மும்பை வெற்றிபெற்றது. விதிகளின்படி, (மும்பை - குஜராத்) அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி, சென்னையுடன் இறுதிப்போட்டியில் மோதும். இதற்கிடையே, சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், சின்ன மலிங்காவுமான மதீஷா பத்திரனாவின் குடும்பத்தை ‘தோனி’ சந்தித்திருப்பது வைரலாகி வருகிறது.

வரும் 28ஆம் தேதி நடைபெற்ற உள்ள ஐபிஎல் சீசன் இறுதிப்போட்டிக்கு முன்பாக, மதீஷா பத்திரனாவின் குடும்பத்தினரை தோனி சென்னையில் சந்தித்துள்ளார்.

அப்போது, ” ‘நீங்கள் பதிரானாவைப் பற்றி எந்த கவலையும்படத் தேவையில்லை. அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்’ என தோனி சொன்னார். இதுபோன்ற தருணங்கள் நாங்கள் கனவில்கூட கண்டதில்லை. இப்போது மல்லி (பதிரானா) பாதுகாப்பான கைகளில் இருப்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என மதீஷா பதிரானா சகோதரி விஷுகா பதிரானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது, சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கெனவே எல்லாப் போட்டிகளிலும் பதிரானாவை விட்டுக் கொடுக்காது தோனி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vishuka pathirana insta page

கடந்த ஆண்டு முதல் சென்னை அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் மதீஷா பதிரானா இலங்கையைச் சேர்ந்தவர். இவர், நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com