CSK vs KKR| நல்ல 2 மாற்றங்களுடன் வரும் சிஎஸ்கே.. IPL-ல் அதிகவயது கேப்டனாக களமிறங்கிய தோனி!
மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற மகேந்திர சிங் தோனி, 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற பிறகு 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன்சிக்கு குட்-பை சொன்னார்.
தோனிக்கு பிறகு 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் ருதுராஜ் கெய்க்வாட். 2024 ஐபிஎல்லில் ருதுராஜ் தலமையில் 7 போட்டிகளை வென்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற நிலையில் அதிகப்படியான நம்பிக்கையுடன் சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. முதல் போட்டியில் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய சிஎஸ்கே அணி பிரகாசமாக தொடங்கியது. ஆனால் அடுத்த 4 போட்டிகளையும் வரிசையாக இழந்த அணி, தற்போது வெற்றிக்காக போராடிவருகிறது.
இந்நிலையில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடரிலிருந்தே விலகிய நிலையில், புதிய கேப்டனாக அன்கேப்டு வீரர் தோனி சென்னை அணியை வழிநடத்தவிருக்கிறார்.
2 மாற்றங்களுடன் வரும் சிஎஸ்கே..
சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்கியா ரஹானே பந்துவீச்சை தேர்வுசெய்தார். கொல்கத்தா அணியில் மொயின் அலி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதற்குபிறகு பேசிய தோனி அணியில் திரிப்பாத்தி மற்றும் அன்சுல் கம்போஜ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ”எங்கள் பேட்டர்கள் சிறந்தவர்கள், அவர்கள் அவர்களின் உள்ளுணர்வை நம்பவேண்டும், எங்களுக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறந்த தொடக்கம் தேவை” என்று பேசினார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகவயது கேப்டனாக (43 வருடம் 278 நாட்கள்) இன்று சென்னை அணியை வழிநடத்துகிறார் தோனி.

