சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்PT Desk

“ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியதற்கு காரணம் இதுதான்” - சாய் சுதர்சன் Exclusive!

ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியதற்கு, ரஞ்சிக் கோப்பை, டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடியதே காரணம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கூறியிருக்கிறார்.
Published on

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன். குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரான சாய் சுதர்சன், தன்னுடைய ஐபிஎல் அனுபவம் குறித்து புதிய தலைமுறையில் தற்போது பேசியுள்ளார்.

Sai Sudharsan
Sai SudharsanKunal Patil

சாய் சுதர்சன் நம்மோடு பகிர்ந்துகொண்டவை, இங்கே:

“Domestic சீசன் தான் எனக்கு கூடுதல் தன்னம்பிக்கையை கொடுத்ததென நான் உணர்கிறேன். காரணம், அவைதான் அளவான நேரத்தில், நிறைவான அனுபவத்தை எனக்கு கொடுத்தது.

இதை சொல்ல காரணம், பொதுவாகவே Domestic சீசன்களில், ஒரு நாள் கோயமுத்தூர்ல ஆடுவோம், ஒருநாள் போய் டெல்லியில ஆடுவோம். அதாவது பல பல இடங்கள்ல, பல பல கண்டிஷன்ல அடுத்தடுத்த நாள் ஆடுவோம். இதுதான் ஐபிஎல்-லிலும். அதாவது ஐபிஎல்-ல், நாலு நாள் ஒரு இடத்துல ஆடிட்டு அடுத்து இன்னொரு இடத்துல வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு க்ளைமேட்டில் ஆடுவோம்.

Domestic சீசன்களில் ரொம்ப சுவாரஸ்யமான விஷயமே, சூழல்களை நாங்க எப்படி ஏற்றுக்கொள்கிறோம் (Adopt) என்பதுதான். Domestic போட்டிகளில் அதிகமா விளையாடும்போது, ‘நம்மால வேற கண்டிஷனுக்கு சீக்கிரம் நம்மை அடாப்ட் பண்ண முடியும்’ என்ற ஐடியா கிடைக்கும். அதனாலதான் நிறைய நம்பிக்கையோட ஐபிஎல்-ல் விளையாடினேன்னு நினைக்கிறேன். அந்தவகையில் Domestic match நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்திருக்கு.

Sai Sudarshan
Sai SudarshanTwitter

எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்போதெல்லாம் என்னோட பேட்டிங்கை சுற்றி, கிரிக்கெட்ட சுற்றி என் திறமையை வளர்த்துப்பேன். இன்னும் கவனம் செலுத்தினால், வரும் காலங்கள்ல நான் சந்திக்கும் போட்டிகள் எல்லாமே ஈஸியா இருக்குமென நம்புகிறேன்.

எதையும் கடனுக்காக செய்யாமல், ‘இத மட்டும்தான் ஆடணும்; இத ஆடக்கூடாது’ன்னு நினைக்காமல், ஒவ்வொரு முறையும் என்னோட பேட்டிங்கை நான் மேம்படுத்திக்கனும்னு ஆசைப்படுறேன். எனக்கு இயல்பாவே, நல்ல பேட்டிங் வரும்னு நினைக்கிறேன்” என்றார்.

இவரது பேட்டியை கட்டுரையின் மேல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com