‘முன்பே கணித்த கிறிஸ் கெயில்?...’ - நல்ல வாய்ப்பிருந்தும் பஞ்சாப் தவறவிட்டதை ஆர்சிபி பிடிக்குமா?

2023 பிளே ஆஃப்-க்கு தகுதிபெற பலமான வாய்ப்புகள் கண்முன்னே இருந்தும், டெல்லியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, பஞ்சாப் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால், அந்த வாய்ப்பை, ஆர்சிபி பிடித்துக்கொண்டு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
PBKS vs RCB
PBKS vs RCBFile image

பஞ்சாப் கிங்ஸ்

இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை தவிர மற்ற அணிகள் எல்லாம் தலா 13 போட்டிகளை விளையாடி முடித்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி ( இரு அணிகளுக்கும் மீதம் தலா 2 போட்டிகள் இருந்தது) இடையேயான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

PBKS vs DC
PBKS vs DCRavi Choudhary, PTI

ஏனெனில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற நல்ல வாய்ப்பிருந்த அணிகளில் ஆர்.சி.பி.யும், பஞ்சாப் அணியும் இடம்பெற்றிருந்தன. ஆனால், நேற்று டெல்லிக்கு எதிரானப் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம், இதனை பஞ்சாப் அணி சிக்கலாக்கிக் கொண்டது. பஞ்சாப் அணி நேற்று வெற்றிபெற்றிருந்தால், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து முன்னேறி இருக்கும்.

PBKS
PBKSRavi Choudhary, PTI

ஆனால், தற்போது தோல்வியை தழுவியதை அடுத்து, வரும் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் அணியுடனான போட்டியில், நல்ல நெட் ரன்ரேட் அடிப்படையில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது. அவ்வாறு வெற்றிபெற்றாலும், மும்பை, ஆர்.சி.பி., கொல்கத்தா ஆகிய அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இருப்பினும் அதுவும் சந்தேகமே. ஏனெனில், பஞ்சாப் அணி தற்போது -0.308 என்ற நெட் ரன் ரேட் அடிப்படையில் பலவீனமாக உள்ளது.

ஆர்.சி.பி.

இதேபோல்தான் ஆர்.சி.பி. அணியின் நிலமையும் தற்சமயம் உள்ளது. டெல்லி அணி எப்படி பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் தகுதி வாய்ப்பை அடித்து நொறுக்கியதோ, அதேபோல், 5-வது இடத்தில், +0.166 நெட் ரன் ரேட்டுடன் இருக்கும் பெங்களூரு அணியின் கனவை, ஹைதராபாத் அணி கலைக்கும் வாய்ப்புள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் 65-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், பெங்களூரு அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை தோல்வியுறும் பட்சத்தில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு அப்போதும் இருக்கும்.

LSG-RCB
LSG-RCBPTI

ஆனால், குஜராத் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 70-வது லீக் போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற வேண்டும். எனினும், அப்போதும் நெட் ரன் ரேட்டே பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். அதனால், அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஆர்.சி.பி. உள்ளது.

பஞ்சாப் மற்றும் டெல்லி அணி போட்டிக்கு முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவானும், ஆர்.சி.பி. அணியின் முன்னாள் வீரருமான கிறிஸ் கெயில் ஜியோ சினிமாவில் பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து உரையாடியபோது, “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அந்த அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்துவிடுவார்கள்.

Chris Gayle
Chris Gayle@RCBTweets

ஆனால், அதேநேரத்தில் பஞ்சாப் அணி தகுதி பெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அந்த அணி தகுதிபெறுவது மாதிரி எனக்கு தோன்றவில்லை. இருப்பினும் கிரிக்கெட்டில், எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானலும் நடக்கலாம், இந்த அணிதான் வெளியே போவார்கள் என்று அதுபற்றி யாராலும் சொல்ல முடியாது. கொல்கத்தா அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்” என்று தெரிவித்திருந்தார். டி20 ஜாம்பவனான அவர், சொன்னதுபோன்றே பஞ்சாப் அணி நேற்று தோல்வியுற்றது.

பிளே ஆஃப் வாய்ப்பு:

1. குஜராத் டைட்டன்ஸ் (+0.835)

18 புள்ளிகளுடன் தகுதிபெற்றுள்ளது. முதலிடத்தையும் உறுதி செய்துள்ளது. (குஜராத் vs ஆர்.சி.பி. - ஞாயிற்றுக்கிழமை)

2. சிஎஸ்கே (+0.381)

15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 96.9 சதவிகிதம் வாய்ப்புள்ளது. (சிஎஸ்கே vs டெல்லி - சனிக்கிழமை)

3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (+0.304)

15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 96.9 சதவிகிதம் வாய்ப்புள்ளது. (லக்னோ vs கொல்கத்தா - சனிக்கிழமை)

4. மும்பை இந்தியன்ஸ் (-0.128)

14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 87.5 சதவிகிதம் வாய்ப்புள்ளது. (மும்பை vs ஹைதராபாத் - ஞாயிற்றுக்கிழமை)

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (+0.166)

12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 25 சதவிகிதம் வாய்ப்புள்ளது. (ஆர்.சி.பி. அணி, ஹைதராபாத் அணியுடன் இன்றும், குஜராத் அணியுடன் ஞாயிற்றுக்கிழமையும் மோதுகிறது)

6. ராஜஸ்தான் ராயல்ஸ் (+0.140)

12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை, கொல்கத்தாவை விட நல்ல நெட் ரன் ரேட் இருந்தாலும், ஆர்.சி.பி. அணியைவிட குறைவாகவே உள்ளது. மும்பையை ஹைதராபாத்தும், பஞ்சாப்பை ராஜஸ்தானும் வீழ்த்த வேண்டும். அப்படியிருந்தாலும், ஆர்.சி.பி. வெற்றி, தோல்வியை பொறுத்து வாய்ப்புண்டு. (ராஜஸ்தான் vs பஞ்சாப் கிங்ஸ் - வெள்ளிக்கிழமை)

7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (-0.256)

12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. 9.4 சதவிகிதம் வாய்ப்புள்ளது. (கொல்கத்தா vs லக்னோ - சனிக்கிழமை)

8. பஞ்சாப் கிங்ஸ் (-0.308)

12 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. 9.4 சதவிகிதம் வாய்ப்புள்ளது. (பஞ்சாப் vs ராஜஸ்தான் - வெள்ளிக்கிழமை)

டெல்லி மற்றும் ஹைதராபாத் பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறிவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com