“அவர் Head கோச்சானால் இந்தியாவின் கோப்பை எண்ணிக்கை உயரும்”-கம்பீரின் சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை

கவுதம் கம்பீரின் சிறுவயதி பயிற்சியாளர் இந்தியாவின் கோப்பை கனவை கவுதம் கம்பீர் நனவாக்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்web

நடப்பு 2024 டி20 உலகக்கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் அடுத்த ஹெட் கோச்சுக்கான தேர்வில் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக்குழு உடனான நேர்காணலில் கம்பீர் மற்றும் WV ராமன் இருவரும் கலந்துகொண்ட நிலையில், கம்பீர் அனைத்திலும் முதன்மையானவராக இருந்துவருகிறார். உலகக்கோப்பை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படும் நிலையில், கவுதம் கம்பீர் குறித்து அவருடைய சிறுவயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர்
அந்த எமோசன்.. அந்த வெறி! 2023 ODI WC-ல் ஏற்பட்ட வலி! 2024-ல் ஆஸியை பழிதீர்த்து ஆப்கானிஸ்தான் வரலாறு!

கம்பீர் பயிற்சியாளர் ஆனால் இந்தியா கோப்பை வெல்லும்!

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்ந்தெடுப்பது குறித்து பேசிய அவருடைய சிறுவயது பயிற்சியாளர், “என்னுடைய மாணவன் ஒருவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறினால் அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். ஒருவேளை கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மாறினால், இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பை வெல்லும்” என ஏஎன்ஐ உடன் பேசும்போது நம்பிக்கை தெரிவித்தார்.

கெளதம் கம்பீர்
கெளதம் கம்பீர்ட்விட்டர்

மேலும் நடப்பு உலகக்கோப்பை குறித்து பேசிய அவர், “நம்முடைய இந்திய அணி சிறப்பாகவே விளையாடிவருகிறது, முந்தைய உலகக்கோப்பைகளில் நம்முடைய பந்துவீச்சு அவ்வளவு சிறப்பானதாக இருந்ததில்லை. ஆனால் தற்போது பும்ரா உடன் இணைந்து நமது பவுலிங் யூனிட்டும் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது. இந்தமுறை இந்தியா கோப்பையுடன் வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர்
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com